ஜெர்மனியை ஆண்ட சர்வாதிகாரியான அடால்ஃப் ஹிட்லருக்குச் சொந்தமானது என்று கருதப்படும் ஆண்ட்ரியாஸ் ஹூபர் கைக்கடிகாரம், அலெக்சாண்டர் வரலாற்று ஏலம் என்ற நிறுவனத்தினால் ஏலத்திற்கு வந்துள்ளது. இது 31 கோடி வரை ஏலம் போக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கைக்கடிகாரத்தை ஏப்ரல் 20, 1933 ஹிட்லர் அவருடைய 44வது பிறந்த நாளுக்கு தனக்கு தானே பரிசாக வழங்கியதாகக் கூறப்படுகிறது. இந்த தங்கக் கைக்கடிகாரம் எதிர்புறமாகத் திரும்பத் தக்க வகையில் வடிவமைக்கப்பட்டது. அதில் 1933 ஆண்டு நாசி கழுகு மற்றும் ஸ்வஸ்திக்கா பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹிட்லரின் பிறந்தநாள், அதிபராகப் பதவியேற்ற நாள், ஜெர்மனியில் ஹிட்லர் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்தல் நாள் போன்றவை பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த கைக்கடிகாரத்தின் வரலாற்றைப் பல கடிகாரம் செய்பவர்களும் ராணுவ வரலாற்று ஆய்வாளர்களும் ஆராய்ச்சி செய்து, இதனின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தியுள்ளனர். வாட்ச் ப்ரோ என்ற பிரத்தியேக கடிகார இதழ் படி, இந்த கைக்கடிகாரம் வெள்ளிக்கிழமை மே 04,1945 ஆம் ஆண்டு பிரெஞ்சு ராணுவ வீரனால் கண்டுபிடிக்கப்பட்டுக் கையகப்படுத்தப்பட்டது. அந்த வீரர், ஹிட்லர் பெர்ச்டெஸ்காடனில் பின்வாங்கிய போது அங்கு முதலில் வந்து சேர்த்த நேசநாட்டு படைகள் குழுவைச் சேர்த்தவர்.
ஆனாலும் ஜெய்கர்-லெகோல்ட்ரே என்ற கடிகார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இந்த கைக்கடிகாரத்தின் உண்மைத்தன்மையை ஏற்கமுடியவில்லை எனத் தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து அலெக்சாண்டர் வரலாற்று ஏலம் நிறுவனம் அறிக்கையில் இரண்டாம் உலகப்போரில் ஆண்ட்ரியாஸ் ஹூபர் நிறுவனம் குண்டுபோட்டுத் தகர்க்கப்பட்ட நிலையில் எந்தவிதமான ஆவணங்களும் பெறப்படவில்லை எனத் தெரிவித்துள்ளது.
Published by:Saravana Siddharth
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.