எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி சாயம் ஏன்? அதிமுக நிர்வாகி விளக்கம்

எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி சாயம் ஏன்? அதிமுக நிர்வாகி விளக்கம்
எம்.ஜி.ஆர். சிலை
  • News18 Tamil
  • Last Updated: February 19, 2020, 10:37 PM IST
  • Share this:
திருவண்ணாமலை அருகே மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்.க்கு காவி நிற சட்டை அணிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த கருங்காலிகுப்பம் கிராமத்தில் 30 ஆண்டுகள் பழமை வாய்ந்த எம்ஜிஆர் சிலை ஒன்று உள்ளது. இந்த சிலைக்கு அதிமுக உள்ளிட்ட பொதுமக்கள் நினைவு நாள், பிறந்தநாள் மற்றும் அதிமுக கட்சியினர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதி எம்ஜிஆர் பிறந்ததினம் கொண்டாடப்பட்டது. இதற்கு முன் தினம் எம்ஜிஆர் சிலையை அதிமுக நகர செயலாளர் ஓசி முருகன் தலைமையில் தூய்மைப்படுத்தி காவி நிறத்தில் சட்டை அணிவிக்கப்பட்டு பின்னர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


தொடர்ந்து கடந்த இரண்டு மாத காலமாக இந்த கிராமத்தில் உள்ள எம்ஜிஆர் சிலை காவி நிறத்தில் காணப் பட்டது. வழக்கமாக எம்ஜிஆர் சிலைக்கு வெள்ளை நிறத்தில் மட்டுமே சட்டை அணிவிக்கப்பட்டு இருக்கும் ஆனால் தமிழகத்தில் எந்தப் பகுதியிலும் இல்லாத வகையில் கருங்காலிகுப்பம் கிராமத்தில் உள்ள இந்த சிலைக்கு மட்டுமே காவி நிறத்தில் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து நகரச் செயலாளர் ஓசி முருகனிடம் விசாரித்தபோது, ‘நாங்கள் ஆரஞ்சு நிறத்தில்தான் சிலையில் சட்டையின் நிறத்தை மாற்றினோம். இது எங்களுக்கு காவியாக தெரியவில்லை. இப்படி மாற்றப்பட்டிருப்பதால் இப்பகுதியில் எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை’ என்று தெரிவித்தார்.மேலும் படிக்க: சமஸ்கிருதம் நாடு தழுவிய மொழி; தமிழ் மொழியை தமிழர்கள் மட்டுமே பேசுகின்றனர் - இல. கணேசன்
First published: February 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்