கடற்கைரையில் பல்டி அடித்து அசத்தும் அதா சர்மா... வீடியோ

கடற்கைரையில் பல்டி அடித்து அசத்தும் அதா சர்மா... வீடியோ

அதா சர்மா

Adah Sharma அதா சர்மா கடற்கரையில் இடைவிடாது பல்டி அடித்து அசத்திய வீடியோ இணைய வாசிகள் இடையே வைரல் ஆகி வருகின்றது.

 • Share this:
  பிரபுதேவாவின் சார்லி சாப்ளின் 2ம் பாகம் படத்தில் நடித்த நடிகை அதா சர்மா. இவர் இணையத்தில் படு ஆக்டிவாக இருந்து வருகின்றார். பொழுது விடிந்தால் போஸ்ட், வீடியோ என தினமும் இணையத்தில் மூழ்கியுள்ள இவர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகின்றது.

  அதில், கடற்கரையில் இடைவிடாது பல்டி அடித்து அசத்தியுள்ளார். இவருக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு. இவரது குட்டிக்கரணத்தை கண்ட இவரது ரசிகர்கள் பலரும் இவருக்கு லைக்ஸ்களையும் கமெண்ட்ஸ்களையும் குவித்து வருகின்றனர்.

  அதா சர்மா (Adah Sharma) பெரும்பான்மையாக இந்தி மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தனது பள்ளிப் படிப்பை முடித்த பிறகு 2008 ஆம் ஆண்டில் வெளியான 1920 எனும் பாலிவுட் திகில் திரைப்படத்தில் முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்தார். இந்தப் படம் வணிக ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தத் திரைப்படத்திற்காகச் சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு இவரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது.

  பிறகு 2014 ஆம் ஆண்டில் ஹசீ தோ பசீ எனும் காதல் நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்தார். இந்தத் திரைப்படமும் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. பின்னர் கன்னடம் தெலுங்கு என படு பிஸியான இவர் தொடர்ந்து நடிப்பில் ஆர்வம் காட்டி வந்தார். தெலுங்குத் திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக ஆனார்.

  அடா ஷர்மா மகாராட்டிரத்தில் மும்பையில் வாழ்ந்து வந்தார். இவரின் தந்தை எஸ். எல். ஷர்மா மதுரையைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவர் தனது பள்ளிப் படிப்பை மும்பையில் முடித்தார். இவர் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே நடிகையாக வேண்டும் என விரும்பினார். ஆனால் இவர்களின் பெற்றோர்கள் பள்ளிப்படிப்பை முடிக்க அறிவுறுத்தினர். இவர் பன்னிரண்டாம் வகுப்பிற்கு பின் படிப்பதை நிறுத்திக் கொண்டார்.

   

      

   

  சர்மா ஒரு சீருடற்பயிற்சியாளர் ஆவார். தனது மூன்றாம் வயதிலிருந்தே நடனம் ஆடி வருகிறார். இவர் மும்பையில் உள்ள நடராஜ் கோபி கிருஷ்ணா கதக் நடன அகாதமியில் கதக் நடனத்தில் பட்டம் பெற்றார். மேலும் இவர் அமெரிக்க ஐக்கிய நாட்டில் நான்கு மாதங்கள் சல்சா நடனம் கற்றுக் கொண்டார். மேலும் ஜாஸ், பாலே, இடை ஆட்டம் போன்ற நடனங்களையும் கற்றுக் கொண்டார்.
  Published by:Sankaravadivoo G
  First published: