Home /News /trend /

சோஷியல் மீடியாக்களில் கிண்டலடித்து ட்ரோல் செய்யப்படும் நடிகை பிரியங்கா சோப்ராவின் புதிய பிசினஸ்..! ஏன் தெரியுமா.?

சோஷியல் மீடியாக்களில் கிண்டலடித்து ட்ரோல் செய்யப்படும் நடிகை பிரியங்கா சோப்ராவின் புதிய பிசினஸ்..! ஏன் தெரியுமா.?

(Credits: Instagram/@priyankachopra)

(Credits: Instagram/@priyankachopra)

Priyanka Chopra | நடிகை பிரியங்கா சோப்ராவின் புதிய ஹோம்வேர் ப்ராடக்ட்ஸ் பிசினஸ் தற்போது நெட்டிசன்களால் கடும் விமர்சனத்தை சந்தித்து உள்ளது. மேலும் சோனா ஹோம் தொடர்பான சில மீம்களும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

  நடிகை பிரியங்கா சோப்ரா தனது திறமையால் சந்தேகத்திற்கு இடமின்றி நடிப்புலகில் ஒரு உலகளாவிய அடையாளமாக திகழ்ந்து வருகிறார். நடிகையாக மட்டுமல்ல நியூயார்க்கை தளமாககொண்டு தனது உணவகமான 'சோனா' -வை தொடங்கி வாடிகையாளர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளதால் ஒரு வெற்றிகரமான தொழிலதிபராகவும் இருந்து வருகிறார்.

  சமீபத்தில் தனது பிசினஸ் பார்ட்னரான மனீஷ் கோயலுடன் இணைந்து 'சோனா ஹோம்' என்ற ஹோம்வேர் பிராண்டையும் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா. சோனா ஹோம் கலெக்‌ஷனில் இந்திய கலாச்சாரம் மற்றும் மரபுகளால் ஈர்க்கப்பட்ட ஆடம்பரமான டேபிள் கிளாத், டின்னர்வேர், பார் டெக்கர் போன்ற பல பொருட்கள் விற்கப்படுகின்றன. தனது Sona Home collection-ல் கிடைக்கும் பொருட்கள் இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்றன. இந்திய கலாச்சாரம் அதன் விருந்தோம்பலுக்கு பெயர் பெற்றது, இது சமூகம் மற்றும் மக்களை ஒன்றிணைப்பது பற்றியது... மேலும் என்னைப் பொறுத்தவரை இது சோனா ஹோமின் நெறிமுறை" என தனது சமீபத்திய இன்ஸ்டா போஸ்ட்டில் கூறி இருந்தார்.

  ஆனால் இவரது இந்த புதிய ஹோம்வேர் ப்ராடக்ட்ஸ் பிசினஸ் தற்போது நெட்டிசன்களால் கடும் விமர்சனத்தை சந்தித்து உள்ளது. மேலும் சோனா ஹோம் தொடர்பான சில மீம்களும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. இத்தனைக்கும் பிரியங்கா சோப்ரா இந்த புதிய பிரண்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தவில்லை. தற்போது அமெரிக்கா மற்றும் கனடாவில் மட்டுமே சோனா ஹோம் சர்விஸ் கிடைக்கிறது. இருந்தும் இந்தியாவில் நடிகையின் இந்த புதிய பிசினஸ் விமர்சனங்களை சந்திக்க காரணம் அதில் பட்டியலிடப்பட்டுள்ள பொருட்களின் தாறுமாறான விலை தான்.   
  View this post on Instagram

   

  A post shared by Priyanka (@priyankachopra)


  தற்போது அமெரிக்கா மற்றும் கனடாவில் மட்டுமே கிடைக்கும் சோனா ஹோம் வெப்சைட்டில் குறிப்பிட்டுள்ளபடி பன்னா டேபிள் ரன்னர் விலை ஒன்றின் விலை இந்திய மதிப்பில் ரூ.14,043, பன்னா ரெக்டேங்குலர் ஷேப் டேபிள் கிளாத்தின் விலை இந்திய மதிப்பில் ரூ.30,612 ஆகும். ஒரு சுல்தான் கார்டன் டின்னர் பிளேட் $60-க்கு (ரூ. 4,700) விற்பனை செய்யப்படுகிறது. 4 பன்னா கோஸ்டர்களின் ஒரு செட் ரூ.4,576. சர்விங் பவுல் ஒன்றின் விலை ரூ.7,732, ஒரு டீ கப் மற்றும் சாஸர் விலை ரூ.5,365 மற்றும் ஒரு மக்-கின் விலை ரூ.3,471. டாலர்களில் விற்கப்பட்டாலும் மேற்கண்ட இந்திய ரூபாய் மதிப்பு கிட்டத்தட்ட சமமானவை.

  Also Read : வெகு விரைவாக உடல் எடையை குறைத்த நடிகைகள் : அதற்காக அவர்கள் சாப்பிட்ட உணவு என்ன தெரியுமா?

  Sona Home-ன் வெப்சைட்டிற்கு சென்று பார்த்த இந்திய நெட்டிசன்கள் அதில் டாலரில் பட்டியலிடப்பட்டிருக்கும் பொருட்களின் இந்திய மதிப்பின் விலையை எண்ணி மலைத்து போயினர். ஒரு யூஸர் ஒரு டேபிள் கிளாத்தின் விலை 400 டாலராம்.! யாராவது வாங்கப் போகிறீர்களா..?? என்று கேட்டுள்ளார்.  மற்றொரு யூஸர் வெளியிட்டுள்ள காட்டமான பதிவில், "இந்திய கலாச்சாரத்தை கவர்ந்திழுப்பதன் மூலமும், அபத்தமான விலையில் பொருட்களை விற்பதன் மூலமும் காசு பார்க்கும் வெளிநாட்டவர்களை பார்த்தது போக, இந்தியர்களே இந்திய கலாச்சாரத்தை விற்பனையாக்கி நகைப்புக்குரிய விலையில் பொருட்களை விற்கும் வேலையை தொங்கி விட்டார்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

  Also Read : இந்த விசித்திரமான கடல் உணவின் விலை இவ்வளவா? மிரள வைத்த வைரல் போட்டோ! 

  மற்றொரு யூஸர் குறிப்பிடுகையில் யாரேனும் ஒரு டேபிள் கிளாத்தை 400 டாலர் கொடுத்து வாங்கினால், அவர்கள் நெடுஞ்சாலையில் செல்லும் போது கொள்ளைக்கு ஆளாக தகுதியானவர்கள் என்பது என் கருத்து என்றார். மற்றொருவர் 30,000 ரூபாய் மதிப்புள்ள டேபிள் கிளாத் வாங்கும் அளவுக்கு பணக்காரராக இருக்க ஆசைப்படுவதாக  ட்விட்டரில் கூறி இருக்கிறார். இன்னொரு ட்விட்டர் யூஸர் ஒருபடி மேலே சென்று, சோனா ஹோம் கட்லரியின் படத்தை ஸஹர் செய்து $68 அல்லது ரூ. 5,300 விலையில் கப்& சாஸர் செட்டை வாங்கிய பிறகு ஒருவருக்கு பால் அல்லது டீக்கு பணம் இல்லாமல் போய்விடும் என்று கிண்டல் செய்துள்ளார்.
  Published by:Selvi M
  First published:

  Tags: Priyanka Chopra, Trending

  அடுத்த செய்தி