ஹலோ மைனா நந்தினியா... செல்போன் அழைப்புகளால் விரக்தியடைந்து போலீஸ் புகார் கொடுத்த அரசியல் கட்சி நிர்வாகி

ஹலோ மைனா நந்தினியா... செல்போன் அழைப்புகளால் விரக்தியடைந்து போலீஸ் புகார் கொடுத்த அரசியல் கட்சி நிர்வாகி
நடிகை மைனா நந்தினி
  • Share this:
சீரியல் நடிகை மைனா நந்தினி பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்கை உருவாக்கி அதில் தனது செல்போன் எண்ணை இணைத்திருப்பதால் அதை நீக்கி அப்பக்கத்தை முடக்க வேண்டும் என்று குருநாதன் போலீசில் புகாரளித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அண்ணாமடுவை சேர்ந்தவர் குருநாதன். இவர் சமத்துவ மக்கள் கட்சியில் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளராக உள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சரவணன் மீனாட்சி என்ற நெடுந்தொடரில் நடிக்கும் நடிகை மைனா நந்தினி என்ற பெயரில் போலி முகநூல் கணக்கை உருவாக்கி, அதில் குருநாதனின் செல்ஃபோன் நம்பர் இணைக்கப்பட்டுள்ளது.

இதனால், சீரியல் நடிகை மைனா நந்தினி என நினைத்து, இரவு நேரங்களில் பல வாலிபர்கள் குருநாதனை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். மேலும், 'நீங்க அழகா இருக்கீங்க', 'உங்கள நேர்ல பாக்கணும்' என்று கேட்கும் அந்நபர்கள் சில நேரங்களில் தகாத வார்த்தைகளைப் பேசியும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனர். எனவே இரவு நேரங்களில் செல்போனில் வரும் அழைப்புகளை எடுப்பதற்கு பயமாக இருப்பதாக குருநாதன் கூறுகிறார்.
இதுகுறித்து அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த குருநாதன், ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் போலீசார் போலி முகநூல் கணக்கை முடக்கி, தனது செல்போன் எண்ணை நீக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். நடிகை பெயரிலான போலி ஃபேஸ்புக் கணக்கில் தனது செல்போன் எண் இணைக்கப்பட்டிருப்பதால் இரவு தூக்கத்தைத் தொலைத்த சமத்துவ மக்கள் கட்சி வடக்கு மாவட்டச் செயலாளர் குருநாதன் திக்குமுக்காடி போயுள்ளார்.

மேலும் படிக்க: புள்ளைங்களா எப்படி இருக்கீங்க... சிம்பு சொன்ன குட்டிக் கதை
First published: February 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்