நடிகர் விவேக்கிற்காக பிரார்த்தனை செய்யும் இணையவாசிகள்

நடிகர் விவேக்கிற்காக பிரார்த்தனை செய்யும் இணையவாசிகள்

விவேக்

நடிகர் விவேக் விரைவில் வீடு திரும்ப வேண்டும் என இணையத்தில் அவரை பின் தொடர்பவர்கள், அவரது ரசிகர்கள்,. என திரைத்துறையினர் பலரும் Get well soon விவேக் சார் என பதிவிட்டு வருகின்றனர்.

 • Share this:
  கொரோனா தடுப்பூசி போட்ட நிலையில், நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நடிகர் விவேக் நேற்று தடுப்பூசி செலுத்திக் கொண்டார். தடுப்பூசி குறித்த எந்த அச்சமும் தேவையில்லை என அவர் கூறினார்.

  இந்நிலையில், இன்று வீட்டில் இருந்த நடிகர் விவேக்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை குடும்பத்தினர் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, விவேக் நலமுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  நேற்று தடுப்பூசி போட்டுக் கொண்ட விவேக் இன்று மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளது, திரைப்பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

      

   

   

  இந்நிலையில், மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விவேக் விரைவில் நலம்பெற இறைவனை பிரார்த்திப்பதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், திரைபிரபலங்கள் மற்றும் இணையவாசிகள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sankaravadivoo G
  First published: