ரியாலிட்டி ஷோவில் கொடுத்த டாஸ்க்.. பரிதாபமாக உயிரிழந்த பிரபல நடிகர்

ரியாலிட்டி ஷோவில் கொடுத்த டாஸ்க்.. பரிதாபமாக உயிரிழந்த பிரபல நடிகர்
  • Share this:
ரியால்ட்டி ஷோ விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் இருக்க வேண்டுமென்று கொடுக்கப்பட்ட கடுமையான டாஸ்க் காரணமாக நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பிரபலங்கள் கலந்துகொள்ளும் ரியால்டி ஷோவில் பாதுகாப்பு என்பது முக்கியமானதாகும். நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருப்பதற்காக கொடுக்கப்படும் கடுமையான டாஸ்க் காரணமாக விபரீதங்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

அப்படியொரு சோகமான நிகழ்வு சீன ரியால்டி ஷோவில் அரங்கேறி உள்ளது. தைவான் நாட்டை சேர்ந்தவர் பிரபல நடிகர் காட்ஃப்ரே காவ். 35 வயதான இவர் சேஸ் மீ என்ற ரியால்டி ஷோவில் பங்கேற்றார். அவருக்கு வேகமாக ஓட வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது.


டாஸ்க் தொடங்கி வேகமாக ஓட ஆரம்பித்த காட்ஃப்ரே காவ் சிறிது நேரத்தில் மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனடியாக அவரை அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 3 மணி நேரமாக தீவிர சிகிச்சை கொடுத்தும் பலனில்லாமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், “நாங்கள் மிகவும் வேதனையுடன் சோகத்தை உணர்கிறோம்“ என்றார்.
First published: November 29, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்