ஜோதிடரின் பேச்சைக் கேட்டு ஒன்றரை மாத பெண்குழந்தை கொலை

News18 Tamil
Updated: June 20, 2019, 10:08 PM IST
ஜோதிடரின் பேச்சைக் கேட்டு ஒன்றரை மாத பெண்குழந்தை கொலை
கோப்புப்படம்
News18 Tamil
Updated: June 20, 2019, 10:08 PM IST
கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு அருகே பிறந்து 45 நாட்களே ஆன பெண் குழந்தையை ஜோதிடர் பேச்சை கேட்டு கொன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். 

சிக்கமகளுரு பகுதியில் மஞ்சுநாத், சுப்ரீத்தா தம்பதியினருக்கு கடந்த மே மாதம் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு நிஹரிகா என்று பெயர் வைத்துள்ளனர். பெண் குழந்தை பிறந்ததால் அதிருப்தியில் இருந்துள்ளார் மஞ்சுநாத். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்தவர்கள் வெளியே சென்றிருந்த நேரமாக பார்த்து குழந்தையை கொல்ல மஞ்சுநாத் திட்டமிட்டுள்ளார் .

வீட்டின் பின் புறம் தன் மனைவி பாத்திரம் கழுவிக்கொண்டிருந்த சமயத்தில், குழந்தையை தன் கரங்களாலேயே நெறித்து கொன்றுள்ளார். பின்னர் தூங்க சென்றிருக்கிறார்.


வேலைகளை முடித்துவிட்டு குழந்தையைப் பார்த்த சுப்ரீத்தா, அதிர்ச்சி அடைந்தார். மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் இருந்த குழந்தை குறித்து தன் கணவர் மஞ்சுநாத்திடம் கூறியுள்ளார். ஒன்றும் தெரியாததுபோல் மஞ்சுநாத் இருந்துள்ளார்.

மருத்துவரை வரவழைத்து சிகிச்சை அளித்த போது, குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். சந்தேக மரணமாக இருப்பதால், போலீசில் புகார் அளிக்குமாறும் மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், அக்கம்பக்கத்தினர் மஞ்சுநாத் வீட்டை சூழ ஆரம்பித்தனர். அப்போது, அவர்களிடம் போலீசுக்கு தகவல் கொடுக்க கூடாது என்றும் மஞ்சுநாத் எச்சரித்ததாக தெரிகிறது. அதுமட்டுமல்லாது, குழந்தையை அவசர அவசரமாக தகனம் செய்துள்ளார்.

Loading...

கணவர் மீது சந்தேகமடைந்த சுப்ரீத்தா போலீசில் புகார் அளித்துள்ளார். போலிஸ் விசாரணையில் குற்றத்தை மஞ்சுநாத் ஒப்புக்கொண்டுள்ளார். பெண் குழந்தையால் குடும்பத்திற்கு தீங்கு ஏற்படும் என்று ஜோதிடர் கூறியதை கேட்டு கொலை செய்ததாக தந்தை மஞ்சுநாத் வாக்குமூலம் அளித்துள்ளார். குழந்தையை கொலை செய்ய சொன்ன ஜோதிடரை போலீசார் தேடி வருகின்றனர்.

First published: June 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...