Video: ஓய்வின்றி இயங்கும் ரயில் ஓட்டுநர்கள்.. ’சிக்னல்’ கேப்பில் சிறுநீர் கழிக்கும் பரிதாபம்

Vijay R | news18
Updated: July 19, 2019, 10:14 PM IST
Video: ஓய்வின்றி இயங்கும் ரயில் ஓட்டுநர்கள்.. ’சிக்னல்’ கேப்பில் சிறுநீர் கழிக்கும் பரிதாபம்
வீடியோவில் பதிவான காட்சி
Vijay R | news18
Updated: July 19, 2019, 10:14 PM IST
சிக்னல் விழுந்த வாய்ப்பில் தண்டவாளத்தில் புறநகர் மின்சார ரயில் முன் சிறுநீர் கழித்துவிட்டு மீண்டும் ரயிலை இயக்கும் ஓட்டுனரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மும்பையில் பரபரப்பான வாழ்க்கை சூழலுக்கு மத்தியில் மின்சார ரயில் ஒட்டுநனர் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மும்பை மக்களின் பயணத்திற்கு உயிர்நாடியாக இருப்பது புறநகர் மின்சார ரயில் தான். அலுவலக நேரங்களில் புறநகர் மின்சார ரயில்களில் நிரம்பி வழியும் கூட்டத்தால் ரயில் ஓட்டுநர்கள் ஓய்வின்றி வேலை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

மும்பையில் அம்பர்நாத் - உல்ஹஸ்நகருக்கு இடையே இயக்கப்பட்ட புறநகர் மின்சார ரயில் சிக்னல் காரணமாக தடைப்பட்டு நின்றது. அந்த ரயிலின் ஓட்டுநர் இடைப்பட்ட நேரத்தில் மின்சார ரயிலிருந்து இறங்கி தண்டவாளத்தில் சிறுநீர் கழித்து மீண்டும் ரயிலை இயக்கி உள்ளார்.

இதனை அருகிலிருந்த பாலத்திலிருந்து ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.



மின்சார ரயில் ஓட்டுநருக்கான அறையில் தனியாக கழிவறை இல்லாததே இதற்கு காரணம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மும்பையின் மின்சார ரயில்கள் தொலைத்தூரத்திற்கு இயக்கப்படுவதால் ஓட்டுநர்களுக்கு ஒய்வில்லாமல் 2 முதல் 3 மணிநேரம் தொடர்ந்து ரயிலை இயக்கி வருகின்றனர். இதன் காரணமாக இதுப்போன்ற சிக்கல்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படுகிறது.





ரயில் ஒட்டுநர்களின் இதுப்போன்ற சிரமத்தை போக்க ரயில்வே நிர்வாகமும், ரயில்வே மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும் உரிய நடவடிக்கை வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் பலர் கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.
First published: July 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...