பிப்ரவரி 14 என்றாலே, இளசுகளின் மனதில் பட்டாம்பூச்சி பறக்கத் தொடங்கிவிடும். காதலிப்பவர்கள், காதலிக்க தூதுவிட்டுக் கொண்டிருப்பவர்கள், ஒருதலையாகக் காதலிப்பவர்கள் என எல்லோருக்குமே அந்த நாள் குதூகலத்தைக் கொடுத்துவிடும். ரோஸ், கரடி பொம்மை, சாக்லெட், பூங்கொத்து, வாழ்த்து அட்டை எனத் காதலர்கள் தங்களுக்குள் வித்தியாசமான பரிசுகளையும் மனதையும் பரிமாறிக் கொள்வார்கள். நம் ஊரில் காதலர் தினம் என்பது பார்க், பீச், சினிமா, ரிசார்ட் என சுற்றுவதோடு முடிந்துவிடுகிறது. அதுவும் இப்போது காதலர் தினத்துக்கு எதிராகக் கெடுபிடி செய்வோரும் களத்தில் குதித்துவிடுவதால், காதலர் தினம் என்பது எப்போதும் போலவே ஒரு நாளாகவே கழிந்துவிடுகிறது.
தங்களுக்கென்று இணை இருப்பவர்கள் சரி, இணையில்லாதவர் என்ன செய்வது? பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்னு நொந்து கொள்ள வேண்டியதுதான். முன்பெல்லாம் காதலர் தினம் ஒரு வயது வந்தோருக்கான தினம் என்ற கருத்து நிலவி வந்தது. ஆனால் தற்போது நிலமை மாறி வயதின் எல்லைகளைக் கடந்துவிட்டது, ஏனெனில் டீனேஜர்களும் காதலர் தினத்தை கொண்டாடுகிறார்கள். எவ்வாறாயினும், கல்லூரிகள் அல்லது நிறுவனங்கள் காதலர்களிடையே அன்பைப் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வுகளை ஊக்குவிப்பதில்லை, மாறாக கற்றல் மற்றும் அறிவைப் பெறும் வயதில் அவர்களை கவனச்சிதறலுக்கான வழிமுறையாகக் கருதுகின்றன.
இந்த நிலையில் காதலர் தினத்தை கொண்டாடத் இணையை தயார் செய்துகொள்ளுமாறு கல்லூரி நிறுவனம் ஒன்று அறிவித்ததாக கூறப்படும் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆகாஷ் இன்ஸ்டிடியூட் கிளைத் தலைவர் கூறியதாகக் கூறப்படும் அந்த பதிவில், ஒரு முக்கிய அறிவிப்பு என்ற பெயரில் சமூக வலைதளமான டிவிட்டரில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், இந்த ஆண்டு முதல் கல்வி நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்படும் காதலர் தின விருந்தில், கலந்து கொள்ள விரும்புவோர் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதிக்கு முன் உங்களுக்காக ஒரு இணையை தேடிக்கொள்வது அவசியம் என கூறியுள்ளது.
மாணவர்கள் தன்னம்பிக்கை பெறவும், வாழ்க்கையில் வெற்றி பெறவும் இந்த செயல்பாடு உதவும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஜாதி, மதம், நிறம், மதம் மற்றும் பாலினத்தைப் பொருட்படுத்தாமல் மாணவர்கள் தங்களுக்கு ஒரு இணையை கண்டுபிடித்து நடக்கவிருக்கும் பார்ட்டியில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
??? pic.twitter.com/sfXBPeH94e
— v (@waybhavvvvv) January 8, 2023
இந்த பதிவிற்கு கமென்ட் செய்துவரும் நெட்டிசன்கள் பலர் தாங்கள் கல்லூரி படிக்கும் போது இது போன்ற அனுபவங்கள் நடக்க வில்லையே என தங்கள் ஆதங்கங்களையும் கவலையையும் தெரிவித்து வருகின்றனர். இந்த அறிவிப்பு தேதியிடப்படாமலும் கையொப்பமிடப்படாமலும் இருந்தாலும், ட்விட்டர் பயனர்களில் சிலர் அது உண்மை என்று உறுதியளித்து அதைக் கண்டு சிரித்து கமெண்ட் செய்து வருகின்றனர். எவ்வாறாயினும், அந்த அறிக்கையின் நம்பகத்தன்மை குறித்து அந்த கல்வி நிறுவனம் சார்பில் மறுப்பு தெரிவித்து எந்த அறிக்கையும் வெளியாகவில்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Trending, Valentine's day, Viral