நள்ளிரவில் ரயில்வே ஸ்டேஷனில் தனக்குத் தானே பிரசவம் பார்த்த இளம்பெண்!

நள்ளிரவில் ரயில்வே ஸ்டேஷனில் தனக்குத் தானே பிரசவம் பார்த்த இளம்பெண்!
குழந்தை மற்றும் கணவர் உடன் ரம்யா
  • Share this:
ரயில்வே ஸ்டேஷனில் பிரசவ வலி ஏற்பட்டதால் பெண் ஒருவர் தனக்குத் தானே பிரசவம் பார்த்ததில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ரேணிகுண்டா அருகே உள்ள பாப்பநாடுபேட்டையைச் சேர்ந்தவர்கள் வெங்கடேஷ் - ரம்யா தம்பதி. 25 வயதான ரம்யா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இத்தம்பதி வேலைநிமித்தமாக சென்னை வந்துள்ளனர். பின் இருவரும் சொந்த ஊரான ஆந்திரா செல்வதற்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வந்தனர். அவர்கள் செல்ல வேண்டிய ரயில் அடுத்த நாள் காலையில் தான் புறப்படும் என்பதால் இரவில் அங்கிருக்கும் பிளாட்பாரத்தில் தங்கியுள்ளனர்.


அப்போது நள்ளிரவில் ரம்யாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. கணவர் உறங்கிக் கொண்டிருந்ததால் அவரைக் கூட உதவிக்கு அழைக்காத ரம்யா, தனது பிரசவத்தை தானே பார்த்துக் கொண்டார். இதையடுத்து அவருக்கு அழகான பெண்குழந்தை பிறந்தது. காலையில் கண் விழித்த கணவரிடம் பெண் குழந்தை பிறந்த விஷயத்தை ரம்யா கூறினார்.

இதையடுத்து அந்த வழியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸ் அதிகாரி சரோஜ்குமார் விஷயம் தெரிந்து ரயில் நிலையத்தில் உள்ள அவசர சிகிச்சை உதவி மையத்துக்கு தகவல் தெரிவித்து முதலுதவி அளிக்கப்பட்டது.

பின்னர் அங்கிருந்து குழந்தையையும், தாய் ரம்யாவையும் ஆம்புலன்ஸ் மூலம் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். துளியும் பயமின்றி தனது பிரசவத்தை தானே பார்த்து பெண் குழந்தையை பெற்றெடுத்த ரம்யாவை நினைத்து மருத்துவர்களும் அங்கிருந்தவர்கள் ஆச்சர்யத்தில் உறைந்து போயினர்.
First published: December 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading