மனதுக்குப் பிடித்த நிறுவனத்தில் அல்லது மனதுக்குப் பிடித்த வேலை கிடைக்கும் வரை ஒரு சிலர் ஓயவே மாட்டார்கள். அதற்காக மேலும் மேலும் படிப்பது தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்வது என்று தாங்கள் செய்ய விரும்பும் விஷயத்தில் தீவிரமாக முயற்சி செய்வார்கள். ஐடி நிறுவனங்கள் மற்றும் ஐடி தொழில்நுட்பம் உலகம் முழுவதும் தேவையான சேவையாக மாறி வந்துள்ள நிலையில், ஐடி ஜாம்பவான் நிறுவனங்களில் வேலை செய்வதற்கு யாருக்குத்தான் ஆசை இருக்காது! அதுவும் கூகுள் நிறுவனத்தில் வேலை செய்வது என்பது பெரிய விஷயம்.
மனம் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் வேதாளத்தை தன் தோளில் சுமந்து புதிய கதை சொல்லத் துவங்கினார் என்ற கதை இந்த இளைஞரின் வாழ்க்கையில் உண்மையாகி உள்ளது. கூகுள் நிறுவனத்திற்குப் பல முறை வேலைக்கு விண்ணப்பித்த இளைஞர் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டும் தன்னுடைய மனம் தளராமல் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து வந்துள்ளார். அவரது முயற்சி தற்போது பலித்து விட்டது.
Also Read:கண் இமைக்காமல் பார்க்கவைக்கும் இன்ஃபினிட் ஜூம் கொண்ட டிஜிட்டல் ஆர்ட் இணையத்தில் வைரல்!
தொடர்ந்து ஏதேனும் ஒரு விஷயம் கிடைக்க வேண்டும் என்று முயற்சி செய்யும் பொழுது, அது கிடைக்காமல் ஒவ்வொரு முறையும் நிராகரிப்பை எதிர்கொள்ளும் போது மனம் உடைந்து போகும். நிராகரிப்பு ஒருவருடைய தன்னம்பிக்கையை முழுவதுமாக குறைத்து விடும். ஆனால் டைலர் கோஹன் என்ற இளைஞர் வாழ்வில் அவ்வாறு நடக்கவில்லை! சான் பிரான்சிஸ்கோவை சேர்ந்த டைலர், கூகுள் நிறுவனத்தில் பணிக்குச் சேர 39 முறை விண்ணப்பித்துள்ளார். நாற்பதாவது முறை விண்ணப்பித்த பின் தான் அவருடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நிறுவனத்தில் வேலையில் இணைய உள்ளார். இந்த விஷயத்தை அவரை லிங்க்ட்இன் தளத்தில் ஸ்க்ரீன்ஷாட் வழியாகப் பதிவு செய்துள்ளார்.
இதைப் பற்றி டைலர் கூறுகையில், ‘ஒரு விஷயத்தைத் தொடர்ந்து முயற்சி செய்வதற்கும், பைத்தியக்காரத்தனமாக உணர்வதற்கும், மிக மிக மெல்லிய திரைதான் இருக்கிறது. நான் எந்த இடத்தில் இருக்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. 39 நிராகரிப்புகள் ஒரே ஒரு முறை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது’ என்று விண்ணப்ப மின்னஞ்சல்கள் மற்றும் அதற்குக் கூகுள் நிறுவனம் அளித்த பதில்கள் அனைத்தையுமே இவர் ஸ்க்ரீன் ஷாட்டாக பகிர்ந்துள்ளார். கூகுளில் வேலைக்குச் செல்வதற்காக 2019ம் ஆண்டு முதல்முறையாக விண்ணப்பித்தார்.
Also Read:கொட்டும் மழையிலும் உணவு டெலிவரி செய்த ஊழியர் - வைரல் வீடியோ
எல்லோருக்கும் முதல் முயற்சியில் வெற்றி கிடைப்பதில்லை என்றாலும், அடுத்தடுத்து ஒரு சில முயற்சிகளில் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள். ஆனால் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, பலமுறை மீண்டும் மீண்டும் முயற்சி செய்த பின்பு தான், இவரது கனவு ஆசை நிறைவேறியுள்ளது. லிங்க்ட்இன் தளத்தில் இவரது பதிவு வைரலாக பகிரப்பட்டு பலரும் பாராட்டியும் தங்கள் அனுபவங்களை நினைவு கூர்ந்தும் கமெண்ட் செய்து வருகின்றனர். கூகுள் நிறுவனம் பலருக்கும் ஒரு கனவு நிறுவனமாகும்.
எந்த வேலை கிடைத்தாலும் அதில் சேர்வதற்குப் பலரும் தயாராக இருக்கிறார்கள். எனவே நீங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளிலுமே வெவ்வேறு பணிகளுக்கு விண்ணப்பித்தீர்களா அல்லது நீங்கள் விண்ணப்பித்த 32 பணிகளுமே ஒரே மாதிரியானவையா, உங்களுக்குக் கடைசியில் நாற்பதாவது விண்ணப்பத்தில் வேலை கிடைத்தது வெறும் அதிர்ஷ்டம் தானா?’ என்று ஒருவர் சந்தேக கேள்வி கேட்டுள்ளார். அதற்குக் கூகுள் நிறுவனத்தில் தனக்குக் கிடைத்த பணி தன்னுடைய திறனுக்கு மிகவும் பொருத்தமானது என்றும் இதைத் தவிர வேறு எந்தப் பணியைக் கூகுள் நிறுவனம் வழங்கினாலும் அதைத் தேர்ந்தெடுக்க மாட்டேன் என்றும் பதிலளித்துள்ளார். பலமுறை நிராகரிக்கப்பட்டும் இறுதியில் நாற்பதாவது முறை இவர் தேர்ந்தெடுக்கப்பட்டது தற்போது வரை ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.