ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

மகனுடன் ஆபத்தான ஸ்டண்ட் செய்யும் தந்தை - ட்விட்டரில் கொந்தளித்த நெட்டிசன்கள்!

மகனுடன் ஆபத்தான ஸ்டண்ட் செய்யும் தந்தை - ட்விட்டரில் கொந்தளித்த நெட்டிசன்கள்!

குழந்தையை வைத்து ஆபத்தான முறையில் விளையாடும் தந்தை

குழந்தையை வைத்து ஆபத்தான முறையில் விளையாடும் தந்தை

சுமார் 32 வினாடிகள் மட்டுமே இந்த வீடியோ இருந்தாலும் சிறு குழந்தையின் தந்தை செய்த செயல் அனைவரையும் திகைப்பில் பார்க்க வைத்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

குழந்தை என்பது ஒவ்வொரு வீட்டிலும் இனம் புரியாத சந்தோசத்தை அளிக்கும் ஒரு பொக்கிஷம். குழந்தையின் தந்தை, தன்னுடைய மகனோ? அல்லது மகளோ? தைரியமாக வளர வேண்டும் என்பதற்காக கொஞ்சம் கரடு முரடாக வளர்ப்பதை நாம் பார்த்திப்போம். ஆனால் தற்போது இணையத்தில் வைரலாகும் ஒரு வீடியோவில் தந்தை செய்த செயல் என்பது இணையவாசிகளைக் கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏன் தெரியுமா?

ட்விட்டரில் குல்சார் சஹாப் என்ற பயனர் ஒருவர், கடந்த புதன்கிழமை ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் ஒரு தந்தை தன்னுடைய 2 முதல் 3 வயது வரையிலான குழந்தையை கையில் வைத்து மேலே தூக்கிப் போடுவது போன்ற வீடியோ தொடங்குகிறது. பின்னர் அவரது கைகளில் குழந்தைப் பத்திரமாக பிடித்துக் கொள்கிறார். இதோடு தன்னுடைய உள்ளங்கையில் குழந்தையை நிற்க வைத்து, எளிதாக கீழே இறக்கிவிடுகிறார்.

சில நிமிடங்களுக்கு அந்த குழந்தை தலைகீழாக நிற்கிறது. பின்னர் மீண்டும் குழந்தையை தூக்கிப் போட்டு பிடித்து கொஞ்சுவது போல வீடியோ முடிவடைகிறது. சுமார் 32 வினாடிகள் மட்டுமே இந்த வீடியோ இருந்தாலும் சிறு குழந்தையின் தந்தை செய்த செயல் அனைவரையும் அதிரவைத்தது.

இணையத்தில் வெளியிடப்பட்ட நாள் முதல் இதுவரை இந்த வீடியோ 380.9 k பார்வைகளையும் கிட்டத்தட்ட 7,000 லைக்குகளையும் குவித்துள்ளது. குறிப்பாக இந்த வீடியோவில் தனது தந்தையின் செயல்களைப் பார்த்து அந்த குழந்தை ரசிப்பது போன்ற காட்சிகள் தோன்றினாலும் இணையவாசிகளிடம் கோபத்தைப் பெற்றுள்ளது என்று தான் கூற வேண்டும்.

Read More : 'டிவி பாரு.. ஆனா தூங்கவே கூடாது..' ரஜினி பட பாணியில் மகனுக்கு தண்டனை வழங்கிய தாய்.. வைரல் வீடியோ!

இந்த வீடியோவைப் பார்த்த ட்விட்டர் பயனர் ஒருவர், நீயெல்லாம் ஒரு அப்பாவா? குழந்தையை எப்படி பாதுகாக்க வேண்டும்? என்பது தெரியாத என கோபத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். மற்றொரு பயனர் ஒருவர், குழந்தையை வைத்து ஆபத்தான ஸ்டென்ட் செய்யும் அந்த தந்தையை சிறையில் அடைக்க வேண்டும் என்றும், இது மிகவும் ஆபத்தானது; இதுப்போன்ற ஸ்டென்ட் வீடியோக்களைக் கூட குழந்தைகளிடம் காட்டிவிடாதீர்கள் என்பது போன்ற பல பதிவுகளை கோபத்தில் ட்விட் செய்துள்ளனர்.

இன்றைக்கு இணைய பயன்பாடு என்பது மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகிவிட்டது. முன்பெல்லாம் குழந்தையை வைத்து வீடியோக்கள் போடுகிறார்கள் என்றாலும் அவையெல்லம் மிகவும் ரசிக்கும் படியாக இருக்கும். ஆனால் குழந்தையை தூக்கிப்போட்டு பிடித்து ஸ்டென்ட் செய்யும் வீடியோவைப் பார்க்கும் போது கொஞ்சம் பதறத்தான் செய்கிறது.

First published:

Tags: Trending, Trending Videos, Viral, Viral Video