நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழி உண்டு. ஆனால், இயற்கையின் படைப்பிலேயே உங்களுக்கு ஏதேனும் நோய் இருக்குமானால், அதுவும் தீர்க்க முடியாத ஒன்று என்றால், அதன் மூலம் ஏற்படும் வேதனை மிக கொடியதாகும். அதிலும் சக மனிதர்களுக்கு இல்லாத அரிய வகை நோய் ஒருவருக்கு ஏற்படுகிறது என்றால், அதனால் ஏற்படும் வேதனைகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த லலித் படிதார் என்னும் இளைஞருக்கும் இத்தகைய பெரும் கவலை இருக்கிறது. 6ஆவது வயதில் இருந்தே அரியவகை நோயால் இவர் பாதிக்கப்பட்டுள்ளார். ‘Werewolf syndrome’ (ஓநாய் தோற்றம்) என்னும் அரிய வகை பிரச்சினை இவருக்கு இருக்கிறது. இதன் முக்கிய பிரச்சினை என்னவென்றால், உடலெங்கிலும் விலங்குகளுக்கு இருப்பதைப் போல ரோமம் கடுமையாக வளர்ந்து, விலங்கு போலவே காட்சியளிக்கும். உலகில் கடந்த சில நூற்றாண்டுகளில் 50 பேரை மட்டுமே இந்த நோய் பாதித்துள்ளதாம்.
கவலையை பகிர்ந்து கொண்ட லலித்
தனக்கு ஏற்பட்டுள்ள அரியவகை பாதிப்பு குறித்து லலித் படிதார் பேசுகையில், “நான் எல்லோரையும் போல ஆரோக்கியமான குடும்பத்தைச் சேர்ந்தவன்தான். என்னுடைய தந்தை ஒரு விவசாயி. நான் தற்போது 12ஆம் வகுப்பு படித்து வருகிறேன்.
Read More : மகனுடன் ஆபத்தான ஸ்டண்ட் செய்யும் தந்தை - ட்விட்டரில் கொந்தளித்த நெட்டிசன்கள்!
என் உடம்பில் எப்போதுமே ரோமம் காணப்படுகிறது. நான் பிறந்தபோதே அதிக முடி இருந்ததாகவும், அப்போது மருத்துவர்கள் ஷேவ் செய்ததாகவும் எனது பெற்றோர் கூறியுள்ளனர். ஆனால், எனக்கு விவரம் தெரிந்த 6 அல்லது 8 வயதில் இருந்தே இந்தப் பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது. வேறு யாருக்கும் இல்லாத வகையில் என் உடலில் முடி வளர்ச்சி காணப்படுகிறது’’ என்று கூறினார்.
நோய் குறித்த தகவல்கள்
இதை ஹைப்பர்ட்ரிகோசிஸ் என்று குறிப்பிடலாம். இந்தப் பிரச்சினை இருந்தால் உடல் முழுவதும் முடி வளர்ச்சி காணப்படும். பாதிக்கப்பட்ட நபரின் முகம் கூட முடியால் மூடப்படும். உடல் முழுவதும் இப்படி நிகழலாம் அல்லது ஆங்காங்கே இடைவெளி காணப்படும்.
ஊட்டச்சத்து குறைபாடு, ஸ்டீராய்டு மருந்துகள், சில சமயம் அனோரெக்ஸியா போன்ற பிரச்சினைகள் காரணமாக இது நிகழும்.வலி மிகுந்த அறிகுறிகள் எதுவும் தென்படாது. ஆனால், பாதிப்புகளை கண் கூடாக பார்க்கலாம். ஏனென்றால் வழக்கத்திற்கு மாறான முடி வளர்ச்சி எல்லோர் பார்வையையும் பாதிக்கப்பட்டவர் மீது திருப்பும்.
சில சமயம் வழக்கத்திற்கு மாறான இடங்களிலும் மிகுதியான முடி வளர்ச்சி காணப்படும். இந்த நோய் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது அல்ல என்றாலும், இந்த தோற்றத்தில் ஒருவரை பார்க்கும்போது சக மனிதர்கள் அச்சம் கொள்வார்கள். இதற்கு நிரந்தர சிகிச்சை எதுவும் கிடையாது. வேக்ஸிங், டிரிம்மிங் மற்றும் ஷேவிங் போன்றவை அவ்வபோது தீர்வாக அமையும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Madhya pradesh, Trending, Trending News, Viral