பாம்பு என்றால் படையே நடுங்கும் என்ற பழமொழி காலம்காலமாக வழக்கத்தில் இருப்பது தான். அந்த பழமொழிக்கு ஏற்ப பாம்பு என்ற வார்த்தை காதில் விழுந்தாலே பெரும்பாலனவர்கள் தலைதெறிக்க ஓடிவிடுவார்கள். பாம்புகள் பொதுவாக விஷத்தன்மை கொண்டிருந்தாலும் சில பாம்புகளுக்கு விஷதன்மை இல்லையென்றாலும் அவைகளும் ஆபத்தனாவை தான். அதிலும் மலைபாம்புக்கு விஷ தன்மை இல்லையென்றாலும் அதன் அளவை பொறுத்தவரை ஒரு விலங்கையோ அல்லது மனிதனையோ உயிருடன் விழுங்கும் பலம் கொண்டதாகும்.
ஆனால் வெளிநாட்டில் இந்த மலைபாம்பை வைத்து மசாஜ் செய்வது, விளையாட்டு பொருளாக விளையாடுவது போன்றவற்றை பார்த்து இருப்போம். அப்படி ஒரு வீடியோ ஒன்று தான் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் இரண்டு ராட்சத பாம்புகளை கொண்டு இளைஞர் நடனமாடுகிறார். இளைஞர் இந்த வீடியோவை வேடிக்கையாக பகிர்ந்தாலும் அதில் உள்ள ஆபத்தையும் நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.
இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் தனது தோளில் இரண்டு மலைபாம்பை வைத்துள்ளார். அந்த இரண்டு மலைபாம்பும் மிக நீண்ட ராட்சத அளவில் உள்ளது. அந்த பாம்புகள் தலைகீழாக உள்ளதால் பார்ப்பதற்கே இந்த வீடியோ அதிர்ச்சியாக இருக்கும். பாம்பு மீது இளைஞருக்கு பயமில்லை என்றாலும் எப்போது வேண்டுமானாலும் தவறுதலாக எது வேண்டுமானாலும் நடக்கலாம்.
Also Read :
சிகப்பு நிற குதிரைக்கு கருப்பு பெயிண்ட் அடித்து ரூ.23 லட்சத்திற்கு விற்ற இளைஞர்- 3 பேர் கைது
மலைப்பாம்புகள் பொதுவாக ஆப்பிரிக்க சகாரா பாலைவனம், நேபாளம், இந்தியா, பங்களாதேஷ், இலங்கை, தென்கிழக்கு ஆசியா, தென்கிழக்கு பாகிஸ்தான், தென் சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவில் காணப்படுகின்றன. மறுபுறம் ராட்சத மலைப்பாம்புகள் தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த ஒரு இனமாகும். இவை நச்சுத்தன்மை கொண்டவை அல்ல. தன்னை விட பெரிய பொருட்களை விழுங்கும் திறன் கொண்டது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.