Home /News /trend /

மெட்ரோ ரயிலுக்குள் ‘ரீல்ஸ்’ ஷீட்.. சிக்கலில் சிக்கிய இளம்பெண்..

மெட்ரோ ரயிலுக்குள் ‘ரீல்ஸ்’ ஷீட்.. சிக்கலில் சிக்கிய இளம்பெண்..

மெட்ரோவுக்குள் ரீல் ஷூட் செய்துள்ள இளம் பெண்.

மெட்ரோவுக்குள் ரீல் ஷூட் செய்துள்ள இளம் பெண்.

பொதுமக்கள் பயணம் செய்யும் ரயில், பேருந்துகளில் தொடர்ந்து இது போல் ரீல் ஷூட் செய்வது நியூசென்ஸாக உள்ளது எனக் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

    ஹைதராபாத் மெட்ரோ ரயில் நிலையத்தில் டான்ஸ் ஆடி இன்ஸ்டாகிராம் ரீல் ஷூட் செய்த பெண்ணின் மீது புகார் பதியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    சினிமா பாடலுக்கு ஒரு இளம் பெண் மெட்ர்ரோ ரயிலுக்குள் நடனமாடி காட்சிப் பதிவு செய்த ரீலை டிவிட்டரில் ஒருவர் சுட்டிக்காட்டி மற்ற பயணிகளுக்கு இது ஒரு ‘தொந்தரவு’ என பதிவிட்டு, ஹைதராபாத் மெட்ரோ ரயில் லிமிட்டட் நிறுவனத்தை டேக் செய்து டிவீட் ஒன்றைச் செய்தார்.

    இதனையடுத்து அப்பெண்ணின் மீது நடவடிக்கை எடுக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் தயாராகி வருகிறது. ரயிலுக்குள்ளே நடைமேடையிலோ நடனம் ஆடி படம் பிடிப்பது, வீடியோ பதிவுசெய்வதற்கு அனுமதி கிடையாது என்பதால் அப்பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    பயணிகள் சாதாரணமாக போட்டோ,வீடியோ ஆகியவற்றை எடுத்து கொள்வது தவிர மற்ற விதமான ஷூட்டிங், வீடியோ எடுப்பது ஆகியவற்றிற்கு ரயில் நிலைய அதிகாரிகளின் அனுமதி தேவை.

    இதனால் சினிமா பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ பதிவு செய்தது விதிகளுக்குப் புறம்பானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பெண் யார் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் கூடிய விரைவில் பிடிபடுவார் எனவும் மெட்ரோ நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    அந்த பெண்ணின் வீடியோவுக்கு டிவிட்டரில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பொதுமக்கள் பயணம் செய்யும் ரயில், பேருந்துகளில் தொடர்ந்து இது போல் ரீல் ஷூட் செய்வது நியூசென்ஸாக உள்ளது என கருத்து தெரிவித்துவருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Saravana Siddharth
    First published:

    Tags: Instagram, Metro Rail

    அடுத்த செய்தி