ஒற்றைக் காலுடன் பளுதூக்கிய பெண்! வைரலாகும் வீடியோ

ஒற்றைக் காலுடன் பளுதூக்கிய பெண்! வைரலாகும் வீடியோ

பளுதூக்கும் பெண்

ஒற்றைக்காலுடன் இருக்கும் பெண் ஒருவர் கடினமாக முயற்சி செய்து பளுதூக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

  • Share this:
சமூகவலைதளத்தில் பரவும் வீடியோ ஒன்றில் ஒற்றைக்கால் மட்டுமே இருக்கும் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் டெட்லி லிப்ட்ஸ் என அழைக்கப்படும் அதிக எடை கொண்ட பளுவை தூக்க முயற்சி செய்கிறார். அவரின் முயற்சியின் விளைவாக பளுவையையும் தூக்கிவிடுகிறார். பலருக்கும் தன்னம்பிக்கை அளிக்கும் இந்த வீடியோவை ஐ.ஏ.எஸ் அதிகாரியான பிரியங்கா சுக்லா தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த வீடியோவுக்கு, ``கடல் அலைகளை பார்த்து பயப்படும் கப்பல் ஒருபோதும் தண்ணீரை கடக்க முடியாது; முயற்சி உடையவர்கள் ஒருபோதும் தோற்பதில்லை’ என்ற தன்னம்பிக்கை வார்த்தைகளை கேப்ஷனாக பதிவிட்டுள்ளார்.

பிரியங்கா சுக்லா, இந்த வீடியோவை பகிர்ந்த பிறகு பலரும் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் இதனைப் பகிரத்தொடங்கினர். இதனால், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகத் தொடங்கியது. இதேபோல், ஹாங்காங்கைச் சேர்ந்த இரண்டு கால்களையும் இழந்த மாற்றுத்திறனாளி நபர் ஒருவர் 320 மீட்டர் உயரமுள்ள கண்ணாடி கோபுரம் மீது ஏறி பலரது கவனங்களையும் ஈர்த்தார். ஹாங்காங்கைச் சேர்ந்த லாய் சி-வாய் (Lai Chi-wai ) மிகச்சிறந்த பாராகிளைம்பர் ஆவார். கரடுமுரடான, மிக உயரமான பாறைகளின் மீது ஏறுவதில் வல்லவரான அவர், பாராகிளைம்பிற்காக 4 முறை ஆசிய சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.உலக அளவில் 8 வது இடத்தையும் பெற்றிருந்தார். 2011 ஆம் ஆண்டு கார் விபத்து ஒன்றில் சிக்கிய அவர், படுகாயமடைந்தார். அந்த விபத்துக்குப்பிறகு கால் பகுதிகளுக்கு கீழ் அவரின் உடல் உறுப்புகள் செயல்படாமல் போனது. சக்கரநாற்காலியில் அமர்ந்தவாறு அன்றாட தேவைகளையும், தன்னைப்போல் இருப்பவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்துவருகிறார். அண்மையில் முதுகு தண்டுவடத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்ட அவர், அதற்காக ஹாங்காங்கின் மிக உயரமான கோபுரமான நினா கோபுரத்தில் (Nina Tower ) பாராகிளைம்பிங் செய்ய திட்டமிட்டு அதில் ஏறினார். 320 மீட்டர் உயரமுள்ள அந்த கோபுரத்தின் மீது சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு ஏறினார். 10 மணி நேரத்துக்கும் மேலாக முயற்சி செய்து 250 மீட்டர் உயரம் வரை ஏறினார்.

வானாளவிய அந்த கோபுரத்தில் சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு 250 மீட்டர் ஏறிய முதல் நபர் என்ற சாதனையை அவர் படைத்தார். இதுகுறித்து பேசிய அவர், ``முதலில் இந்த கோபுரத்தின் மீது ஏறுவதற்கு எனக்கு மிகவும் பயமாக இருந்தது. பாறைகளின் மீது ஏறும்போது சிறு சிறு பிடிமானம் கிடைக்கும். அதனால் பாறைகளின் மீது ஏறுவது எளிது. ஆனால், இந்த கோபுரம் முழுவதும் கண்ணாடிகளால் வடிவமைக்கப்பட்டிருப்பதால் பிடித்து ஏறுவதற்கான பிடிமானம் இல்லை. கயிற்றின் துணைக்கொண்டு 250 மீட்டர் ஏறியிருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சியளிக்கிறது" என்றார். இந்த முயற்சியின் மூலம் முதுகுதண்டுவடத்தால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காக லாய் -சி -வாய் 5.2 மில்லியனை நன்கொடையாக திரட்டினார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Ram Sankar
First published: