அலுவலக மீட்டிங்கின் போது நாற்காலியில் இருந்து கீழே விழுந்த பெண்-வைரல் வீடியோ!

கோப்புப் படம்

தனது தலைமை நிர்வாக அதிகாரியுடனான வீடியோ அழைப்பின் போது ஒரு பெண் தனது நாற்காலியில் இருந்து விழுந்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • Share this:
கடந்த ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் காரணமாக வீட்டில் இருந்து வேலை பார்ப்பது அதிகரித்துள்ளது. தற்போது கொரோனோவின் இரண்டாவது அலை காரணமாக வீட்டில் இருந்து வேலை செய்யும் நிலையே தொடர்கிறது. வீட்டிலிருந்து பணிபுரியும் போது முக்கியமாக தகவல்கள் ஆன்லைன் மீட்டிங் மூலம் பகிரப்படுகிறது. ஜூம் மீட்டிங் , வாட்ஸ்அப் வீடியோ கால், கூகுள் டியோ என எண்ணற்ற வீடியோ ஆப்ஸ்கள் தற்போது வீட்டில் இருந்தே வேலை செய்பவர்களுக்கு பேருதவியாக இருந்து வருகிறது.

இப்படி நடைபெறும் வீடியோ கான்பரன்சிங் அழைப்புகளின் போது நடக்கும் வேடிக்கையான நிகழ்வுகள் அடங்கிய பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியான வண்ணம் உள்ளது. அதில் செல்லப்பிராணிகளைக் காண்பிப்பதிலிருந்து, குடும்ப உறுப்பினர்கள் வீடியோ அழைப்பின் போது குறுக்கிடும் காட்சிகள் வரை பார்த்திருப்போம். இதுபோன்று வெளியாகும் பல வீடியோக்கள் மிகவும் வேடிக்கையாகவும், நெட்டிசன்களை சிரிக்க வைக்கும் வகையிலும் இருக்கும். இந்த பட்டியலில் தற்போது புதிய வீடியோ ஒன்று இணைந்துள்ளது.

அதில் தனது தலைமை நிர்வாக அதிகாரியுடனான வீடியோ அழைப்பின் போது ஒரு பெண் தனது நாற்காலியில் இருந்து விழுந்துள்ள காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அவரே அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் அந்த வீடியோவை லைக் மற்றும் கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.

AlsoRead :கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் எவற்றுக்கெல்லாம் அனுமதி?

"தயவுசெய்து எனது நாற்காலி உடைந்த காட்சிகளை அனுபவித்து மகிழுங்கள் என குறிப்பிட்டு சார்லோட் என்ற யூசர் இந்த வீடீயோவை ஷேர் செய்துள்ளார். அந்த வீடியோ கிளிப்பில், அவரது தலைமை அதிகாரியிடம் பணிகள் குறித்து விளக்கி கொண்டிருக்கிறார் . திடீரென்று நாற்காலி உடைந்த சத்தம் கேட்க, மறு நொடியில் அந்த பெண் கீழே விழுந்து விடுகிறார். அவர் நாற்காலியில் இருந்து விழுந்து, மீண்டும் எழுந்த பிறகு, நான் விழுந்த காட்சிகள் பதிவு செய்யப்பட்டதா? என்று சிரித்து கொண்டே கேட்கிறார். அப்போது அவரது தலைமை அதிகாரி ஆமாம் என சிரித்தவாறு கூறும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
மேலும் தலைமை அதிகாரி மட்டுமின்றி சக பணியாளர்களும் அந்த அழைப்பில் உள்ளனர். அவர்களும் சிரிக்கிறார்கள்.

மேலும் தற்போது நிலைமை சரியாகி விட்டதா? என ஒருவர் கேட்கிறார். ஆனால் அந்த பெண் வேறொரு நாற்காலியை எடுக்க சென்று விட்டார். மேலும் அந்த நேரம் கேமராவை அணைத்துவிட்டார், ஆனால் அழைப்பை மியூட் செய்ய மறந்துவிட்டார். அதனால் அவர் வீட்டில் பேசுவது கேட்கிறது. பின்னர் அவர் திரும்பி வந்த காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்திருந்த நிலையில், ஒன்பது மணி நேரத்திற்குள் இந்த வீடியோ 8,000க்கும் மேற்பட்ட பார்வைகளையும், கமெண்ட்ஸ்களையும் பெற்றுள்ளது.

AlsoRead : தமிழகத்தில் 6,000க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு; 150 பேர் உயிரிழப்பு

"இது வித்தியாசமாக உள்ளது" என்று ஒரு நபர் கருத்து தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் “கை தலைக்கு மேல் பறக்கும் காட்சி தான் எனக்கு விருப்பமான பகுதி" என மற்றொரு நபர் கமெண்ட் செய்துள்ளார். "நீங்கள் குறைந்த ஊதியம் பெறுகிறீர்கள் என்பதை அவர்களுக்கு தெரிவிக்க நுட்பமான செயல்" என்றும் “இந்த வீடியோவை பார்த்து சிரிப்பதை என்னால் நிறுத்த முடியவில்லை” என்றும் பல்வேறு கமெண்ட்ஸ்கள் வந்தவாறு உள்ளது. இந்த வீடியோ நெட்டிசன்கள் பலரது மனதில் இடம்பிடித்துள்ளது.

 
Published by:Tamilmalar Natarajan
First published: