• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • தரையில் 'மனித கால்' இருப்பதாக நினைத்து போலீஸை அழைத்த பெண்... ஆனால் நடந்ததோ வேறு? 

தரையில் 'மனித கால்' இருப்பதாக நினைத்து போலீஸை அழைத்த பெண்... ஆனால் நடந்ததோ வேறு? 

புகைப்படம்

புகைப்படம்

இங்கிலாந்தில் 26 வயதான ஒரு பெண் சேற்று வயலில் முளைத்திருந்த உருளைக்கிழங்கை "மனித கால்விரல்" என்று தவறாகக் கருதி, போலீசை அழைத்துள்ளார்.

  • Share this:
இங்கிலாந்தில் உள்ள வின்லடோனின் கேட்ஸ்ஹெட் பகுதியை சேர்ந்த கேட்டி வில்கின்சன், ஜனவரி 5ம் தேதி தனது நாய் ஃபோபியை வாக்கிங்கிற்கு அழைத்து செல்லும்போது அங்கு மனித கால் போன்று கிடந்த ஒன்றை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவலை அளித்துள்ளார். டெய்லி ஆன்லைனுடனான உரையாடலின் போது அவர், குறிப்பிட்ட நாளில் வழக்கத்தை விட வேறொரு பாதையில் சென்றதாகவும், சேற்றில் வழுக்கி விடக் கூடாது என்பதற்காக வயல்களில் கேர்புல்லாக சென்றதாக கூறினார். 

சேற்று வயல்களில்  இந்த பாதை வழக்கத்தை விட நீளமாக இருந்தது. அங்கு தரையில் கால்விரல் போல் இருப்பதாக தான் நினைத்து பயந்ததாக அவர் கூறினார். மற்றவர்களுக்கும் காட்ட அதை போட்டோ எடுத்து பலருக்கும் பகிர்ந்ததாக கேட்டி கூறினார். மேலும் அந்த போட்டோவை பார்த்த அனைவருமே அது கால்விரல் தான் என்று கூறியுள்ளனர். அப்போதுதான் அவர் போலீசாருக்கு தகவல் அளிக்க முடிவு செய்தார். Daily Online வலைத்தளத்துடன் பேசிய கேட்டி வில்கின்சன், அவர் அதை போட்டோ எடுத்த பிறகு, வீட்டிற்குச் சென்று நீண்ட நேரம் யோசித்துக்கொண்டிருந்தார். அது உண்மையில் ஒரு கால் அல்லது ஒரு வித்தியாசமான ஒன்று என்ற சந்தேகம் இருந்தது. 

அந்த பெண்ணால் அதைப் பற்றி யோசிப்பதை நிறுத்த முடியவில்லை. இதனால் அவர் தலை சுற்றியதாக கூறினார். மேலும் அது ஒருவரின் காலில் இருந்து துண்டிக்கப்பட்டிருக்கலாம் என்று தான் பயந்ததாக அவர் கூறினார். இதனையடுத்து அவர் 101 ஐ அழைத்த ஐந்து நிமிடங்களுக்குள் காவல்துறையினர் அவரது வீட்டிற்கு வந்தனர், அவர்கள் ஸ்னிஃபர் நாய்களுடன் இரண்டு மணி நேர தேடலை நடத்தினர். கேட்டி 'கால்விரல்' இருக்கும் இடத்திற்கு அதிகாரிகளுடன் சென்றார், விசாரணை தொடங்கியதும், மேலும் பல போலீஸ் அதிகாரிகள், சர்ஜென்ட்கள் மற்றும் துப்பறியும் நபர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். 

அந்தப் பெண் தான் வைத்திருந்த போட்டோவைக் காட்டினார், அதனை பார்த்த காவல்துறையினரும் அது மனிதனின் கால் விரல் தான் என சந்தேகித்தனர். ஆனால், ஸ்னிஃபர் நாய்கள் கொண்டு வரப்பட்டபோது, அது ஒரு சிறிய உருளைக்கிழங்கு என்றும் 'மனித கால்விரல்' அல்ல என்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு சர்ஜென்ட், கேட்டியை தனியாக அழைத்து சென்று, "இது உங்கள் கால்விரலா?" என்று கையில் அந்த உருளைக்கிழங்கைப் பிடித்துக் கொண்டு கேட்டார். 

ஒரு உருளைக்கிழங்கிற்காக அனைவரின் நேரத்தை வீணடித்ததற்காக தர்மசங்கடமாக உணர்ந்த கேட்டி வில்கின்சன், இதற்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார். ஆனால் அங்கிருந்த பலர் கேட்டி சரியானதை செய்ததாக கூறினார்கள். இரண்டு நாய்கள், அதை வழிநடத்துபவர்கள், ஏழு போலீஸ்கார்கள், சில அதிகாரிகள், இரண்டு துப்பறியும் நபர்கள் மற்றும் சில சர்ஜென்ட்கள் சம்பவ இடத்திற்கு வந்தபின் தான் ஒரு "கொலை ஆவணப்படத்தில்" இருப்பதைப் போல உணர்ந்ததாக கேட்டி கூறினார்.  மேலும் போலீசார் உருளைக்கிழங்கு என நிரூபித்த பின்னர்தான் தான் நிம்மதி அடைந்ததாக கூறினார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: