ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

”தன்வினை தன்னை சுடும்” சக வாகன ஓட்டியை  உதைக்க முயற்சித்து கீழே விழுந்த பெண் - வைரலாகும் வீடியோ! 

”தன்வினை தன்னை சுடும்” சக வாகன ஓட்டியை  உதைக்க முயற்சித்து கீழே விழுந்த பெண் - வைரலாகும் வீடியோ! 

வைரலாகும் வீடியோ! 

வைரலாகும் வீடியோ! 

Trending Video | நம்மூர் மக்களுக்கு சாதரணமாக ஏதேனும் வீடியோ கிடைத்தாலே ட்ரெண்டிங்கில் வைத்து விடுவார்கள். இதுபோன்ற வீடியோ சிக்கினால் சும்மா விடுவார்களா!

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதற்கேற்ப இந்த கர்மா எனப்படுவது பலரது வாழ்விலும் நிகழ்ந்து வருகிறது. அதிலும் சிலருக்கு தாங்கள் செய்த தவறுக்கு உடனுக்குடன் தண்டனை கிடைத்து விடும். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வை உள்ளடக்கிய வீடியோ தான் இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

இரு சக்கர வாகனத்தின் பின்பக்கம் அமர்ந்து வரும் பெண், தனக்கு அருகே வாகனத்தில் வரும் இன்னொரு பெண்ணை எட்டி உதைக்க முயற்சி செய்கிறார். ஆனால் சோகம் என்னவென்றால் எட்டி உதைக்க முயற்சி செய்த பெண்ணே நிலை தடுமாறி தொப்பென்று மல்லாந்து விட்டதை பார்த்த வகையில் பின்பக்கம் விழுந்துவிடுகிறார். இந்தப் பெண் அவ்வாறு விழுவதை, அவர்களுக்குப் பின் காரில் வரும் யாரோ வீடியோ எடுத்து உள்ளனர்.

Read More : ஏமாற்றிய கணவரின் முகத்தைக் கன்னத்தில் பச்சைக்குத்திய மனைவி.. இணையத்தில் வீடியோ வைரல்!

இதனை நேஹாரிக்கா ஷர்மா என்ற பெயர் கொண்ட ட்விட்டர்வாசி கடந்த புதன்கிழமை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். பதிவிடப்பட்டதிலிருந்து தற்போது வரை கிட்டத்தட்ட ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை இந்த வீடியோ பெற்றுள்ளது.நம்மூர் மக்களுக்கு சாதரணமாக ஏதேனும் வீடியோ கிடைத்தாலே ட்ரெண்டிங்கில் வைத்து விடுவார்கள். இதுபோன்ற வீடியோ சிக்கினால் சும்மா விடுவார்களா! முக்கியமாக எட்டி உதைக்க முற்பட்ட அந்த பெண்ணை சாடியும், அந்த பெண்ணை நகைத்தும் பலர் தங்கள் கருத்துக்களை பதிவிட்டும் அந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர். யாருமே கீழே விழுந்த அந்த பெண்ணின் மீது பரிதாபப்பட்டதாக தெரியவே இல்லை.

அதில் ஒரு இணையவாசி ”வாவ் நீ விதைத்தை தான் நீ அறுப்பாய்… சொர்க்கமும் நரகமும் இங்கேதான் இருக்கிறது என்பதை இந்த வீடியோ நிரூபிக்கிறது” என்று தனது கருத்தை பதிவிட்டுள்ளார். மற்றொரு இணையவாசி “இதுதான் முட்டாள்தனம் என்பது. ஒரு செயலை செய்வதற்கு முன் கணக்கீடுகளை செய்ய வேண்டும். இல்லையெனில் கர்மா இப்படிதான் தாக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

இப்படி கர்மாவை நிரூபிக்கும் வீடியோ வெளியாவது இதுவே முதல் முறையல்ல. 2018 ஆம் ஆண்டு இதே போன்றதொரு சிசிடிவி வீடியோ வெளியானது. அதில் ஒரு திருடன் காரின் கண்ணாடி மீது கல்லை விட்டு எறிய முயற்சிக்கும் போது அது மீண்டும் அந்த திருடனின் முகத்திலேயே வந்து விழுந்தது.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Trending, Viral