Home /News /trend /

சோறு தான் முக்கியம்.... ஸ்கை டைவிங்கில் உணவை ருசித்து சாப்பிட்ட பெண்ணின் வீடியோ வைரல்!

சோறு தான் முக்கியம்.... ஸ்கை டைவிங்கில் உணவை ருசித்து சாப்பிட்ட பெண்ணின் வீடியோ வைரல்!

ஸ்கைடை விங்

ஸ்கைடை விங்

மெக்கனா என்ற இளம் பெண் ஸ்கை டைவிங் செய்வதில் தேர்ச்சி பெற்றவர். அதிலும் வித்தியாசமாக எதையாவது செய்யக்கூடிய பழக்கமும் இவரிடம் உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
    ‘தனக்கு எங்கு சென்றாலும் சோறு தான் முக்கியம்‘ என்பதை நிரூபிக்கும் வகையில் மெக்கானா என்ற இளம் பெண் வானில் பறந்து ஸ்கை டைவிங் சென்று கொண்டே பிடித்த உணவை ருசித்து சாப்பிடும் வீடியோ ஒன்று நெட்டிசன்களை வெகுவாக் கவர்ந்துள்ளது.

    உலகில் கடைக்கோடி வரை என்ன சுவாரஸ்சிய விஷயங்கள் நடந்தாலும் நொடியில் நம் கண்முன்னே கொண்டுவருவது தான் இன்றைய சோசியல் மீடியாக்கள். இவற்றின் உதவியோடு பலரின் வாழ்க்கை முன்னேற்றத்தைக் கண்டிருந்தாலும் சில விஷயங்கள் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் தான் நமக்கு ஏற்படுத்துகிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகிறது.

     



     




    View this post on Instagram





     

    A post shared by Mckenna Knipe (@mckennaknipe)






    பொதுவாக ரிஸ்க் எடுக்கிறது எல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரின்னு நினைப்பவர்களுக்காக உள்ள விளையாட்டு தான் ஸ்கை டைவிங். சுமார் 2 ஆயிரம் அடி உயரத்தில் இதற்கு என்றே பிரத்யேகமான விமானத்தில் இருந்து முதுகுல பாராசூட் கட்டிக்கொண்டு குதிக்கிற பொழுது அச்சத்துடன் ரெம்ப திரில்லாக இருக்கும். இவற்றை அனைவராலும் செய்துவிட முடியாது முறையான பயிற்றுனர்கள் உதவியுடன் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே ஸ்கை டைவிங் ஈடுபடலாம்.

    அப்படி முறையான பயிற்சியைப் பெற்று ஸ்கை டைவிங் செல்லும் போது , எந்தவித அச்சமும் இல்லாமல் தனக்கு பிடித்த உணவை ருசித்து சாப்பிடுகிறார். இது தான் தற்போது இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது. மெக்கனா என்ற இளம் பெண் ஸ்கை டைவிங் செய்வதில் தேர்ச்சி பெற்றவர். அதிலும் வித்தியாசமாக எதையாவது செய்யக்கூடிய பழக்கமும் இவரிடம் உள்ளது. இந்த சூழலில் தான் தற்போது தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்று அவர் பதிவிட்டுள்ளார்.

    Read More: இந்த படத்தில் ஒரு 5 மட்டும் தலைகீழாக உள்ளது; 10 வினாடிகளில் கண்டுபிடித்தால் நீங்கள் கில்லாடி

    அதில், வானில் பறந்து ஸ்கை டைவிங் சென்று கொண்டே தன்னுடைய ஒரு பெரிய பையை திறக்கிறார். அதனுள் அவருக்கு பிடித்த உணவு ஒன்று இருந்தது. காற்றில் பறந்தப்படியே அதை சாப்பிடத் தொடங்குகிறார். முகத்தில் எவ்வித அச்சமும் இன்றி தன்னிடம் உள்ள பிடித்த உணவை ருசித்து சாப்பிட ஆரம்பிக்கிறார். இதோடு பிரபலமான உள்ளூர் ஓட்டலுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் தன்னுடைய இன்ஸ்டா பதிவில் தெரிவித்துள்ளார்.

    இது போன்று ஸ்கைடிவிங் செய்யும் போது மெக்கானா சாப்பிடுவது என்பது முதல் முறையல்ல. ஏற்கனவே ஸ்கைடைவிங் செய்யும் போது பர்கர் மற்றும் பீட்சா சாப்பிடும் வீடியோக்களை அவர் பகிர்ந்திருந்தது இணையத்தில் வைரலானது. இந்நிலையில் தற்போது பகிர்ந்துள்ள வீடியோவும் இணையத்தில் வைரலாகி பல மில்லியன் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது.

    மேலும் இதைப் பார்த்த நெட்டிசன்கள், சாகசம் செய்யலாம். கொஞ்சம் பார்த்து செய்யுங்கள் என்றும், அப்படியே அப்பெண் வைத்திருந்த பை கீழே விழுந்துவிட்டால் என்ன நடக்கும் என்பதை யோசித்துக் கூட பார்க்கமுடியவில்லை. இதெல்லாம் பார்த்து பத்திரமாக செய்யுங்கள் என்றும் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். இதோடு இப்பெண்ணை பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை எனவும் இன்ஸ்டாவில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
    Published by:Srilekha A
    First published:

    Tags: Sky Diving

    அடுத்த செய்தி