ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

ஊஞ்சல் ஆடபோறேன்.. பூங்காவுக்குள் நுழைந்து ஊஞ்சல் ஆடிய யானை! க்யூட் வீடியோ!

ஊஞ்சல் ஆடபோறேன்.. பூங்காவுக்குள் நுழைந்து ஊஞ்சல் ஆடிய யானை! க்யூட் வீடியோ!

யானை உணவு தேடி அருகில் உள்ள அம்சாங் வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து கன்டோன்மென்ட் பகுதிக்குள் அடிக்கடி வருகிறது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Assam, India

  அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தியில் உள்ள நரங்கி ராணுவ கான்ட் பகுதியில் உள்ள குழந்தைகள் பூங்காவிற்குள் அம்சாங் வனவிலங்கு சரணாலயத்தைச் சேர்ந்த காட்டு யானை விளையாடி மகிழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  அஸ்ஸாம் கவுஹாத்தியில் உள்ள நரேங்கி ராணுவக் கண்டோன்மென்ட்டில் சிறுவர் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. நரேங்கி ராணுவ கன்டோன்மென்ட் யானை வழித்தடத்தில் அமைந்துள்ளது. மேலும் காட்டு யானைகள் கூட்டமாக நெடுஞ்சாலைகளில் புகுந்து விடுவது வழக்கம்.

  யானை உணவு தேடி அருகில் உள்ள அம்சாங் வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து கன்டோன்மென்ட் பகுதிக்குள் அடிக்கடி வருகிறது. அப்படி தற்போது வந்த சமயத்தில் அங்குள்ள சிறுவர் பூங்காவுக்குள் யானை நுழைந்துள்ளது.

  அங்கே தொங்கவிடப்பட்டிருந்த டயர்களால் ஆன குழந்தைகளுக்கான ஊஞ்சல்களுடன் யானை விளையாட ஆரம்பித்தது.துதிக்கையாலும் பின்னங்கால்களாலும் டயர்களை தள்ளி விட்டு விளையாடிக்கொண்டிருந்தது.

  பின்னர் அந்த ஊஞ்சல்களுக்கு இடையில் நுழைந்து முன்னும் பின்னும் சுற்றி வந்து கொண்டிருந்தது. ஊஞ்சல்களோடு யானை விளையாடும் காட்சி அங்குள்ள ஒருவரால் காட்சியாக்கப்பட்டு இணையத்தை கலக்கி வருகிறது.

  கடந்த மாதம், மற்றொரு காட்டு யானை இராணுவ முகாமில் சாலையைக் கடந்து செல்லும் போது ஒருவர் வீசிய பந்தை தன் காலால் உதைத்து கால்பந்து விளையாடிய காட்சி வைரலானது. பின்னர் தும்பிக்கையை உயர்த்தி, விடைபெறுவது போல் சைகை செய்து விட்டுச் சென்றது.

  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: Assam, Elephant, Viral Video