ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

'சர்க்கஸ்ல இருந்தாரு.. முட்டாள்னு மக்கள் சொன்னாங்க' - மூக்கு நபர் குறித்து தெரியாத சில விஷயங்கள்..!

'சர்க்கஸ்ல இருந்தாரு.. முட்டாள்னு மக்கள் சொன்னாங்க' - மூக்கு நபர் குறித்து தெரியாத சில விஷயங்கள்..!

உலகின் நீளமான மூக்கு

உலகின் நீளமான மூக்கு

பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த, உலகிலேயே நீளமான மூக்குடைய நபர் என்று சாதனை படைத்தவருக்கு அமைக்கப்பட்டுள்ள மெழுகு சிலை பற்றிய பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த, உலகிலேயே நீளமான மூக்குடைய நபர் என்று சாதனை படைத்தவருக்கு அமைக்கப்பட்டுள்ள மெழுகு சிலை பற்றிய பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

  ஒரு மனிதனுடைய மூக்கின் நீளம் கிட்டத்தட்ட 7.5 அங்குலம் அதாவது 19 சென்டிமீட்டர் இருந்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் உண்மைதான்! தாமஸ் வாட்ஹவுஸ் என்று பெயர் கொண்ட நபர் தான் உலகிலேயே மிக நீளமான மூக்கை உடைய மனிதர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். இங்கிலாந்தில் உள்ள யார்க்ஷைர் என்ற இடத்தில் 1730 ஆம் ஆண்டு பிறந்த இவர், தன்னுடைய பல்வேறு சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்களை மகிழ்வித்து வந்தார். கிடைத்துள்ள தகவல்களின் படி அவருடைய மூக்கின் நீளம் கிட்டத்தட்ட 19 சென்டி மீட்டர்கள் வரை இருந்ததாக தெரிகிறது.

  மேலும் அவர் வாழ்ந்த காலத்தில், அவரை மனநலம் பாதித்தவர் என்று பலர் விமர்சனம் செய்துள்ளதாக கூறுகின்றனர். அவரை முட்டாள் என்று தான் பலரும் விமர்சிப்பார்களாம்! இதற்கு காரணம் அவருடைய மூக்கின் நீளம் தான். இந்த அடிப்படை தகவல்கள் மற்றும் அவர் சர்க்கஸில் பணியாற்றியதை தவிர, அவரின் தனிப்பட்ட வாழ்வை பற்றிய வேறு எந்த தகவல்களும் நமக்கு கிடைக்கவில்லை. ஆனால், கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில், உலகின் மிகப்பெரிய மூக்கை உடைய மனிதர் என்பதற்கான சாதனை படைத்ததற்குரிய அங்கீகாரத்தை இவர் பெற்றுள்ளார். 1880 ஆம் ஆண்டு அவருக்கு 50 வயது இருக்கும்போது இவர் மரணம் அடைந்ததாக கூறுகின்றனர்.

  இவரின் தலைப்பகுதியை தான் மெழுகுச் சிலையாக வடிவமைத்து, “ரிப்ளீஸ் பிலீவ் இட் ஆர் நாட்” என்ற அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. ட்விட்டர் வாசி ஒருவர் தாமஸின் கதையை ஒரு பதிவிட்டு அத்துடன் அந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரின் மெழுகு சிலையையும் பதிவேற்றம் செய்துள்ளார். அதில் தாமஸின் மூக்கின் நீளத்தை பார்ப்பதற்கே பிரம்மிப்பாக உள்ளது.

  மணப்பெண் உடையணிந்த வயதான மனைவியை கண்டு குழந்தை போல் கைதட்டி ரசித்த கணவர்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

  அதில் “தாமஸ் வாட்ஹவுஸ் இங்கிலாந்தை சேர்ந்த ஒரு சர்க்கஸ் கலைஞர் ஆவார். பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர், தன்னுடைய மிகப்பெரிய மூக்கிற்காக பிரபலமாக அறியப்பட்டவர். இவரது மூக்கின் நீளம் 7.5 அங்குலம் அதாவது 19 சென்டிமீட்டர்” என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

  இவர் பதிவேற்றம் செய்த சில மணி நேரங்களிலேயே மிகப்பெரும் அளவில் அந்த பதிவு வைரலானது. அதில் இணையவாசி ஒருவர் டெங்கு மாஸ்கை இது நினைவுபடுத்துவதாக புகைப்படத்துடன் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

  சிகாகோ வீதியில் சேலை கட்டி அசத்திய மாப்பிள்ளை தோழர்கள் - வைரலாகும் வீடியோ.!

  இவ்வாறு பலரும் நகைச்சுவை கலந்த ஆச்சரியத்தோடு தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Trending News, Viral News