ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

Video: லோக்கல் ரயிலில் சீட்டுக்காக முடியைப் பிடித்து அடித்துக் கொண்ட பெண்கள்.. குறுக்கே சென்ற போலீசுக்கும் அடி...

Video: லோக்கல் ரயிலில் சீட்டுக்காக முடியைப் பிடித்து அடித்துக் கொண்ட பெண்கள்.. குறுக்கே சென்ற போலீசுக்கும் அடி...

ரயிலில் முடியைப் பிடித்துச் சண்டை போட்ட பெண்கள்

ரயிலில் முடியைப் பிடித்துச் சண்டை போட்ட பெண்கள்

Viral Video | சமுக வலைத்தளத்தில் ரயிலில் பெண்கள் முடியைப் பிடித்து அடித்துக்கொள்ளும் வீடியோ பெருமளவு பகிரப்பட்ட வந்தது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Mumbai, India

  மும்பையில் தானேவில் இருந்து பன்வல் செல்லும் உள்ளூர் ரயிலில் பெண்கள் பெட்டியில் 10க்கும் மேற்பட்ட பெண்கள் முடியைப் பிடித்து சண்டைபோடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பகிரப்பட்டு வந்தது. இதனை அடுத்து அந்த வீடியோவை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

  தானேவில் இருந்து பன்வல் செல்லும் உள்ளூர் ரயிலில் பெண்களில் பெட்டியில் திடீரென சண்டை கிளம்பியுள்ளது. கூட்டமாகப் பெண்கள் ஒருவரை ஒருவரைத் தலை முடியை இழுத்துக்கொண்டு சரமாரியாகத் தாக்கிக்கொண்டுள்ளனர். இந்த நிலையில் சண்டையைத் தடுக்க ஒரு பெண் காவலர் நடுவில் சென்றுள்ளார். அவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

  இப்படி பெண்கள் ஆக்ரோஷமாக அடித்துக்கொள்ளவதர்க்கு என்ன தான் காரணம் என்று விசாரித்ததில் காவலர்களுக்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ரயிலில் இருக்கைக்காகச் சண்டை போட்டு காவலரையே தாக்கியுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

  இந்த சம்பவம் குறித்து வாஷி அரசு ரயில்வே காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் டர்பே நிலையத்திலிருந்து மூன்று பெண்களுக்கு இடையே இருக்கைக்காகச் சண்டை வந்துள்ளது. அது அப்படியே வளர்ந்து இதர பெண்களும் பரவவ பெரிய அளவில் சண்டையாக மாறியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Also Read : தீ வைத்து கொண்டாடியவர்களை திரும்பித் தாக்கிய ராவணன்... தசராவில் நடந்த சம்பவம் - வைரல் வீடியோ

  இதில் மூன்று பெண்கள் உட்பட ஒரு பெண் காவலாளிக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அதில் இரண்டு பெண்களுக்கு ரத்தம் வரும் அளவு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சண்டையில் பெண்கள் காயமடைந்ததை அந்த வீடியோவில் காணமுடிகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று ரயிவே காவல்துறை தெரிவித்துள்ளது.

  Published by:Janvi
  First published:

  Tags: Fight, Mumbai, Urban Train, Women