ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

இதனால் தான் ஸ்விக்கி ஊழியரை டெலிவரி ஹிரோ என்கிறார்கள்.. இணையத்தில் வைரலாகும் விடியோ

இதனால் தான் ஸ்விக்கி ஊழியரை டெலிவரி ஹிரோ என்கிறார்கள்.. இணையத்தில் வைரலாகும் விடியோ

ட்டாபிக்கை சரி செய்யும் விடியோ

ட்டாபிக்கை சரி செய்யும் விடியோ

இப்போது தான் ஸ்விக்கி ஏன் அவர்களை ‘டெலிவரி ஹீரோ’ என்று சொல்கிறது என்பது புரிந்தது என்று கருத்து பதிவிட்டிருந்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஸ்விக்கியில் பணிபுரியும் ஒரு நபர் 30 நிமிட ட்ராபிக்கை சரி செய்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதற்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

  ஸ்ரீஜித் நாயர் என்பவர் தனது லின்க்ட் இன் பக்கத்தில்  இந்த விடியோவை பகிர்ந்துள்ளார். மேலும் அதற்கு, “நான் 30 நிமிடத்திற்கு மேல் ட்ராபிக்கில் சிக்கிக்கொண்டிருந்தேன். அப்போது சிறிதாக ட்ராபிக் சரியாகி வாகனங்கள் முன் செல்வதை பார்த்தேன். நானும் முன்னால் சென்ற போது தான், எப்படி ட்ராபிக் சரியானது என்பது புரிந்தது. ஒரு ஸ்விக்கி நிறுவன ஊழியர் ட்ராபிக்கை சரி செய்துகொண்டிருந்தார். அப்போது தான் ஸ்விக்கி ஏன் அவர்களை ‘டெலிவரி ஹீரோ’ என்று சொல்கிறது என்பது புரிந்தது. அவர்கள் தான் நம் வாழ்க்கையை எளிதாக வாழ்வதற்கு உதவுகின்றனர்” என பதிவிட்டிருந்தார்.

  இந்த பதிவிற்கு ஸ்விக்கி நிறுவனமும் கருத்து தெரிவித்திருந்தது. “அனைத்து ஹீரோக்களும் தொப்பி அணிவதில்லை. சிலர் ஸ்விக்கி டி-சர்ட்டுகளும் அணிவார்கள்” என பதிவிட்டிருந்தது.

  Also Read : ரயிலுக்கு போட்டியாக ரயில்வே ப்ளாட்பாரத்தில் ஆட்டோ ரைடு! அலேக்காக தூக்கிய போலீஸ்!

  இந்த பதிவிற்கு கீழ் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒருவர், “இது அவர் ஸ்விக்கியில் பணிபுரிவதால் வந்த செயல் அல்ல. இது அவர் சமூகத்தின் மேல் வைத்திருக்கும் அக்கறையை தான் காட்டுகிறது” என்று பதிவிட்டிருந்தார்.

  இன்னொருவர், “அவர் செய்யும் செயலுக்கு ஸ்விக்கி பாராட்டுகளை எடுத்துக்க கூடாது” என பதிவிட்டிருந்தார். இந்த சம்பவம் எங்கு நடைபெற்றது என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Swiggy, Viral, Viral News, Viral Video