Home /News /trend /

பெற்ற தாய் தந்தையைப் பல்லக்கில் தூக்கிச் செல்லும் மகன்.. நெகிழச்செய்யும் வீடியோ

பெற்ற தாய் தந்தையைப் பல்லக்கில் தூக்கிச் செல்லும் மகன்.. நெகிழச்செய்யும் வீடியோ

தாய் தந்தையைப் பல்லக்கில் தூக்கிச் செல்லும் மகனின் காட்சி

தாய் தந்தையைப் பல்லக்கில் தூக்கிச் செல்லும் மகனின் காட்சி

யாத்திரைக்குத் தாய் தந்தையைப் பல்லக்கில் தனது தோளில் தூக்கிச்செல்லும் மகனின் காட்சி சமூக வலைத்தளத்தில் பாராட்டைப் பெற்றுள்ளது.

  • Last Updated :
    உத்தரகண்ட் மாநிலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற கன்வார் யாத்திரைக்குத் தனது பெற்றோரைப் பல்லக்கில் அமர வைத்துத் தோளின் மேல் தூக்கிச் சென்ற மகனின் காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 

    உத்தரகண்ட் மாநிலத்தில் ஆண்டுக்கு ஒரு முறை சிவனுக்காக கன்வார் யாத்திரை நடைபெறும். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலின் காரணத்தினால் நடைபெறவில்லை. தற்போது இந்த  ஆண்டு யாத்திரை ஜூலை 14 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. அதில் கலந்துகொள்ள உலகளவிலிருந்து மக்கள் வருகின்றனர். இந்த நிலையில் உத்தரகண்ட் டி.ஜி.பி அசோக் குமார் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டக்காட்சியில் ஒரு நபர் தனது தாய் தந்தை இருவரையும் தோளின் மேல் வைத்துத் தூக்கிச் செல்லுகிறார்.



    அவரது பெற்றோர்களுக்கு வயதான நிலையில் கன்வார் யாத்திரைக்கு அவர்களைப் பல்லக்கு உதவியுடன் தோளின் மேல் வைத்து சிவனை தரிசம் செய்ய அழைத்துச் செல்கிறார். தற்போதைய காலகட்டத்தில் பெற்றோரைக் காப்பகத்தில் விடுவது, அவர்களைச் சுமையாக நினைப்பது போன்றவை நடைபெற்றுக் கொண்டியிருக்கிற நிலையில் இந்த மகனின் செயல் நெகிழ வைக்கிறது என்று பதிவிட்டுள்ளார். பதிவிட்ட சிறிது நேரத்திலே இந்த காட்சி இணையத்தில் வரவேற்பைப் பெற்றுள்ளது. பலரும் அந்த நபரின் செயலை பாராட்டி வருகின்றனர்.

    புராணக் கதைகளில் வரும் சரவண குமார் என்ற பக்தர் அவரது பெற்றோரைத் தோளின் வைத்து புனித இடங்களுக்குச் சுமந்து செல்வர். அதே போல் இந்த கன்வார் யாத்திரை பக்தரையும் ஒப்பிட்டு சமூக வலைத்தளத்தில் பாராட்டுக்கள் குவிக்கிறது.
    Published by:Janvi
    First published:

    Tags: India

    அடுத்த செய்தி