சமூக வலைத்தளமான டிவிட்டரில் கென் ருட்கோவ்ஸ்கி என்ற தொழிலதிபர் பகிர்ந்த வீடியோவில் நூற்றுக்கணக்கில் முதலைகள் பிரேசிலியன் கடற்கரை பகுதியைச் சூழ்ந்துகொண்டு கரை ஒதுங்கி இருப்பது தெரிகிறது. தற்போது அந்த வீடியோ டிவிட்டரில் பெருமளவு பார்வையாளர்களைப் பெற்று வைரலாகி வருகிறது.
கென் ருட்கோவ்ஸ்கி என்ற தொழிலதிபர் கடந்த செப்டம்பர் 15ம் நாள் அந்த வீடியோவை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அதன் பின்னர் சுமார் 7 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சென்று கொண்டு இருக்கிறது.
அந்த காணொளியில் வழக்கத்துக்கு மாறாக நூற்றுக்கணக்கில் முதலைகள் கடற்கரை பகுதியில் குவிந்து கிடக்கிறது. சில அலைகளில் அமைதியாக இருக்கிறது.இந்த முதலைகள் படையெடுப்பினால் அந்த பகுதி மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
அந்த வீடியோவிற்கு இணையத்தில் பலர் அவர்களின் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். சிலர் அது சாதாரணமான நிகழ்வு என்றும் அதின் இனச்சேர்க்கை பருவத்தில் இப்படி நடந்துகொள்ளும், ஒரு வேலை இந்த வீடியோ அப்போது எடுக்கப்பட்டதாக இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.
In Brazil, an invasion of crocodiles that have flooded one of the beaches with several hundred, even thousands, and the local population is panicking pic.twitter.com/3xnkqHdoyl
— Ken Rutkowski (@kenradio) September 15, 2022
ஒரு சில நெட்டிசன்கள் முதலைகள் கடலில் இருப்பது சாதாரணம் தானே, அது நம் வீட்டுப் பகுதியில் வந்தால் தான் கவலைப்படவேண்டும் என்று பதிவிட்டுவருகின்றனர்.
Also Read : விடாமல் துரத்திய யானை..லாவகமாக ரிவர்ஸில் சென்ற ஓட்டுநர்..வைரலாகும் வீடியோ..
மேலும் சிலர் கடலில் அப்படி என்ன நடந்தது, எப்படி நூற்றுக்கணக்கில் முதலைகள் கரை ஒதுங்கும் என்றும் புதிரான கேள்விகளை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் முதலைகள் கடல் பகுதியில் கரை ஒதுங்கியதற்குச் சரியான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
முதலைகளை ஏரியில், ஆற்றில் பார்ப்பது சகஜமாக இருப்பினும் இப்படி கடல் பகுதியில் நூற்றுக்கணக்கில் படையெடுத்து இருப்பது இணையத்தில் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Brazil, Crocodile, Viral Video