முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / மனிதர்களை போல் மூச்சு விடும் அதிசய மரம்.. வைரல் வீடியோவின் இதுதான்!

மனிதர்களை போல் மூச்சு விடும் அதிசய மரம்.. வைரல் வீடியோவின் இதுதான்!

சுவாசிக்கும் அதிசய மரம்

சுவாசிக்கும் அதிசய மரம்

கனடா நாட்டில் சுவாசிக்கும் மரம் ஒன்றின் அதிசய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இணையத்தில் எப்போதுமே ஆச்சரியப்பட வைக்கக் கூடிய, சிலிர்ப்புட்டக்கூடிய வீடியோக்கள் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன. பொதுவாக மரங்கள் பற்றிய காணொளிகள் ஏதாவது வைரலானால் அது அதன் வயது, அரிய வகை பலன்கள் அல்லது பழங்களுக்காக வைரலாக வாய்ப்புண்டு. ஆனால் தற்போது மூச்சுவிடும் மரம் ஒன்று சமூக வலைத்தளத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

கனடாவின் கேல்கரியில் மூச்சுவிடும் மரம் ஒன்று கவனம் ஈர்த்துள்ளது. வைரல் ஹூக் என்ற யூ-டியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவை காட்டிற்குள் சென்ற நபர் ஒருவர் படமாக்கியுள்ளார். அந்த வீடியோவில் மரத் தின் நடுப்பகுதியில் பெரிய விரிசல் காணப்படுகிறது. மனிதர்கள் இழுத்து மூச்சுவிட்டால் எப்படி மார்பு கூடு ஏறி இறங்குமோ, அதேபோல் மரத்தின் அந்த விரிசலான தண்டு பகுதியும் லேசாக விரிந்து மூடுகிறது. பள்ளியில் படிக்கும் போது பாடப்புத்தக்கங்களில் தாவரங்களுக்கும் உயிர் உண்டு எனப் படித்திருப்போம், ஆனால் இந்த அதிசய மரம் அதனை மூச்சுவிட்டு நிரூபிக்கிறதோ? எனப் பலரும் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

' isDesktop="true" id="785635" youtubeid="u7joXgKssec" category="trend">

இந்த மரம் மூச்சுவிடுவதற்குப் பின்னால் மற்றொரு சுவாரஸ்யமான விஷயமும் உள்ளது. ஜூன் மாதத்தில் கேல்கரியில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்துள்ளது. அப்போது மரங்கள் ஏதாவது சாய்ந்துவிட்டனவா அல்லது அபாயகரமான நிலையில் ஏதாவது மரங்கள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய சில இயற்கை ஆர்வலர்கள் அப்பகுதிக்குச் சென்றுள்ளனர். அவர்கள் சில மரங்களைப் பார்வையிட்டுக்கொண்டே வந்த போது தான் இந்த விசித்திரமான காட்சி அவர்களுடைய கண்களில் சிக்கியுள்ளது. அதனை அவர் உடனடியாக வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.

Also Read: சிறுத்தைக்கு ராக்கி கட்டிய ராஜஸ்தானிய பெண் - வைரலாகும் புகைப்படம்.!

அந்த மரத்தின் தண்டு பகுதி பிளந்துள்ளதால், அதற்குள் காற்று புகுந்து வெளிவருகிறது. இதனால் அந்த பிளவு சுருங்கி, விரிகிறது. இதனால் தான் அந்த மரம் மூச்சு விடுவது போல் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை இப்படியொரு வித்தியாசமான காட்சியை யாருமே பார்த்திருக்க வாய்ப்பில்லை என்பதால், இந்த வீடியோவை இதுவரை 5.5 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர்.

அதேபோல் ஏராளமான கமெண்ட்களும் குவிந்து வருகிறது. இந்த வீடியோ பார்க்க நெட்பிளிக்ஸில் வெளியான அமானுஷ்ய விஷயங்களைப் பற்றிய ‘ஸ்ட்ரேஞ்சர்ஸ் திங்ஸ்’ வெப் சீரிஸில் வரும் காட்சி போலவே இருக்கிறது என ஒருவர் யூஸர் கமெண்ட் செய்துள்ளார். பலரோ இந்த வீடியோ பார்க்க விசித்திரமாகவும், ஆச்சரியமாகவும், பயங்கரமாகவும் இருப்பதாக விதவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

First published:

Tags: Tree plant, Viral Video