ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

வீட்டுக் கதவைத் திறந்தவர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி - வரவேற்கக் காத்திருந்த சிறுத்தை குட்டி!

வீட்டுக் கதவைத் திறந்தவர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி - வரவேற்கக் காத்திருந்த சிறுத்தை குட்டி!

சிறுத்தை குட்டி

சிறுத்தை குட்டி

பூட்டிருந்த வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தை குட்டியின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Maharashtra, India

  மகாராஷ்டிராவில் துர்கை அம்மன் சிலை கரைக்கும் பூஜைக்காகச் சென்றுவிட்டுத் திருப்பி வீட்டிற்கு வந்து பார்க்கும்போது வீட்டிற்குள் சிறுத்தை குட்டியைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பிடிபட்ட சிறுத்தை குட்டியின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

  மகாராஷ்டிரா சதாரா மாவட்டத்தில் உள்ள கோயநகர் பகுதியில் பூட்டிருந்த வீட்டிற்குள் சிறுத்தை குட்டி ஒன்று புகுந்துள்ளது. தசரா கொண்டாட்டமாகத் துர்கை அம்மன் சிலையை நீரில் கரைக்கும் பூஜைக்காக குடும்பத்துடன் வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.

  நிகழ்ச்சியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து கதவைத் திறந்தபோது சிறுத்தை குட்டி ஒன்று அமர்ந்து கொண்டிருந்துள்ளது. சிறுத்தையைக் கண்ட குடும்பத்தினர் அலறி அடித்து வெளியில் ஓடி சிறுத்தை குட்டியை வீட்டினுள் வைத்துப் பூட்டியுள்ளனர்.

  ' isDesktop="true" id="815457" youtubeid="ep6hFz5VXWY" category="trend">

  பிடிபட்ட சிறுத்தை குட்டியைக் காண ஊர் மக்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்துள்ளனர். தற்போது அந்த சிறுத்தை குட்டியின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

  Also Read : மின்சார ரயிலில் முடியை பிடித்து சரமாரியாக அடித்து கொண்ட பெண்கள் - வைரல் வீடியோவின் பின்னணி

  அதன் பின்னர் வனத்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டு சிறுத்தை குட்டி பத்திரமாகப் பிடித்துச் செல்லப்பட்டது.

  Published by:Janvi
  First published:

  Tags: Leopard, Maharastra, Viral Video