ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

அரசு பேருந்தில் சிகரெட் பிடித்த நடத்துனர் - வைரலாகும் வீடியோவுக்கு வலுக்கும் கண்டனம்!

அரசு பேருந்தில் சிகரெட் பிடித்த நடத்துனர் - வைரலாகும் வீடியோவுக்கு வலுக்கும் கண்டனம்!

அரசு பேருந்தில் சிகரெட் பிடித்த நடத்துனர்

அரசு பேருந்தில் சிகரெட் பிடித்த நடத்துனர்

அரசு பேருந்தில் நடத்துனர் சிகரெட் பிடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanniyakumari, India

குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் இருந்து பனச்சமூடு செல்லும் பேருந்தில் நடத்துனர் சிகரெட் பிடித்தபடி பயணிகளிடம் டிக்கெட் கேட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பேருந்து நிலையத்திலிருந்து பனச்சமூடு பகுதிக்குச் செல்லும் தடம் எண் 85L அரசு பேருந்தில் நடத்துநர் ஒருவர் தனது இருக்கையில் ஒய்யாரமாக அமர்ந்தபடி சிகரெட் பிடித்துக்கொண்டு வந்துள்ளார்.

மேலும் சிகரெட் பிடித்தபடியே பயணிகளுக்குப் பயணச்சீட்டும் கேட்டுள்ளார். இதனை அந்த பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். தற்போது நடத்துனர் சிகரெட் பிடிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Also Read : தென்னாப்பிரிக்க பெண்ணின் வினோத முயற்சி.. ஒரு நிமிடத்தில் 120 கிராம் கோழிக்கால்களை சாப்பிட்டு கின்னஸ் சாதனை.!

நடத்துநரில் இந்த அலட்சிய செயல் அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தினமும் குழந்தைகள், மாணவர்கள், பெண்கள் உட்படப் பல பேர் பயணம் செய்யும் அரசு பேருந்தில் நடத்துனர் சிகரெட் பிடிப்பது கண்டிக்கத்தக்கதாக உள்ளது என மக்கள் இணையத்தில்  தெரிவித்து வருகின்றனர்.

Published by:Janvi
First published:

Tags: Bus, Kanniyakumari, Viral Video