சில சமயங்களில் நம் கண்களால் பார்க்கக் கூடிய விஷயங்களை நம்மால் நம்பவே முடியாத அளவிற்கு இருக்கும். ஆனால், அவை உண்மையில் நடந்தவையாக இருக்கும். இது போன்ற நிகழ்வுகளை நம் வாழ்நாளில் ஒரு முறையாவது சந்திருப்போம். இது சாதாரணமாக நமது வீட்டில் நடந்தவையாக இருக்கலாம் அல்லது நாம் செல்லக் கூடிய வெளி இடத்திலும் கூட இருக்கலாம். இப்படிப்பட்ட சம்பவம் ஒன்று தான் சைக்கிள் ஓட்டக் கூடிய ஒருவரின் வீடியோவில் நடந்துள்ளது.
மனிதர்கள் எப்பொழுதும் தம்மிடம் உள்ள பொருட்களை மேம்படுத்த சில வகையான முயற்சிகளைச் செய்து வருவது வழக்கம். குறிப்பாக தனக்கு மிகவும் பிடித்த பொருட்களை புது விதமாக வடிவமைத்து மகிழ்வார்கள். வீட்டுப் பொருட்கள் முதல் வண்டி வரை எல்லாவற்றையும் புதுவிதமாக வடிவமைத்து மற்றவர்களை அண்ணார்ந்து பார்க்க வைப்பார்கள். அந்த வகையில், செயின் இல்லாத சைக்கிளைக் கொண்டு பெடல் செய்யக் கூடிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்க்கும் பலருக்கும் எப்படி இது ஓடுகிறது என்கிற கேள்வி எழுந்துள்ளது.
Chainless bike🚲🚲🚲
Lever pedals multiply the force so that one can be able to go faster with less effort. The Vertical pedaling suppresses excessive bending of the hips, knees and ankles... pic.twitter.com/NEbXWBnc8M
— Tansu YEĞEN (@TansuYegen) August 1, 2022
இந்த வீடியோவில், ஒரு இளைஞர் சைக்கிளை ஓட்டிக் கொண்டு செல்கிறார். இது பார்ப்பதற்குச் சாதாரண சைக்கிளைப் போன்று இருந்தாலும், அதன் பெடல் பகுதி மிகவும் மாற்றம் பெற்றுள்ளது. இந்த காணொளியில் இரண்டு வெவ்வேறு நபர்கள் சைக்கிள் ஓட்டுவதைப் பார்க்கலாம். இந்த சைக்கிளின் பெடலில் செயின் இல்லாமல் ஓடுவதே இதன் சிறப்பம்சமாக உள்ளது. இந்த சைக்கிளின் பெடலானது டயர்களுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை தன்சு யெஜென் என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் வீடியோவின் கேப்ஷனாக, “செயின்லெஸ் சைக்கிள். இதன் லிவர்கள் பெடல்களின் விசையைப் பெருக்கி, குறைந்த முயற்சியில் ஒருவர் வேகமாகச் செல்லக் கூடியதாக உள்ளது. செங்குத்தாக பெடலிங் செய்யும்போது, முழங்கால்கள் மற்றும் கணுக்கால்களின் அதிகப்படியான வளைவைக் குறைக்கிறது." என்று குறிப்பிட்டுப் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இதுவரை 5 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களை பெற்றுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் இதன் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், பலர் எப்படி இந்த சைக்கிள் ஓடுகிறது என்று கேள்வி கேட்டு வருகின்றனர். இந்த சைக்கிளால் ஏதாவது விளைவுகள் வருமா, இது உண்மையில் செயின் இல்லாமல் தான் ஓடுகிறதா என்று கேட்டு வருகின்றனர். அதே போன்று சிலர் இந்த சைக்கிளை எங்கே வாங்குவது, இதன் விலை என்ன போன்ற விவரங்களையும் கமெண்ட்ஸில் கேட்டு வருகின்றனர். மொத்தத்தில் செயின் இல்லாமல் ஓடும் மிதிவண்டியை நினைத்துக்கூடப் பார்க்காத அளவுக்கு இந்த வீடியோ பல மக்களின் மனதைக் கொள்ளையடித்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bicycle