ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

1000 ட்ரோன்கள் சேர்ந்து உருவாக்கிய டிராகன் - வியப்பில் ஆழ்த்திய வீடியோ!

1000 ட்ரோன்கள் சேர்ந்து உருவாக்கிய டிராகன் - வியப்பில் ஆழ்த்திய வீடியோ!

டிராகன் வடிவில் 1000 ட்ரோன்கள் சேர்ந்து நடத்திய ஷோ

டிராகன் வடிவில் 1000 ட்ரோன்கள் சேர்ந்து நடத்திய ஷோ

ட்ரோன்கள் சேர்ந்து டிராகன் வடிவில் ஒளிர்ந்து பறந்த வீடியோ இணையத்தில் வைரலாகிறது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இரவு நேரத்தில் வானில் 1000 ட்ரோன்கள் சேர்ந்து டிராகன் வடிவில் ஒளிர்ந்து பறந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

  வானில் கண்கவர் நிகழ்ச்சியாக வண்ணப் பட்டாசு வெடிப்பது மாற்றம் பெற்று நவீன தொழில்நுட்ப ட்ரோன்கள் கண்கவர் நிகழ்ச்சியாக நடைபெற்ற வீடியோ நெடிசன்களால் வியப்பாகப் பார்க்கப்படுகிறது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்சு யெஜென் என்றவரால் பகிரப்பட்ட வீடியோவில் 1000 டோரன்கள் ஒன்றிணைந்து டிராகன் வடிவில் வண்ணமயமாய் வானில் பறந்தது தெரிகிறது.

  விளையாட்டு மைதானத்தில் மேல் டிராகன் வடிவில் ஒளிந்த அந்த காட்சியில் டோரன்கள் டிராகன் அசைவுகளை நிகழ்த்திப் பார்ப்பவர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பதிவிட்டவர் குறிப்பிட்ட தகவலின் படி இந்த கண்கவர் செயல் ஜியோஸ்கன் என்ற நிறுவனத்தால் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் நடைபெற்றுள்ளது என்பது தெரிகிறது.

  ஜியோஸ்கன் நிறுவனம் ட்ரோன்கள் மூலம் இது போல் கண்கவர் செயல்களை அரங்கேற்றி வருகின்றனர். நவீனத் தொழில்நுட்பம் மூலம் இந்த அளவிலான அழகான செயல்களுக்கு நெட்டிசன்கள தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். அதில் சிலர் பிரபல கேம் ஒப்பி த்ரோன்ஸ் ஆங்கில சீரிஸ்யை இது நினைவு கூறுவதாகத் தெரிவித்துள்ளனர்.

  Also Read : மனைவியை தோளில் சுமந்து திருப்பதி படியேறிய கணவன்!! வைரல் வீடியோ!!

  ரஷ்யாவைச் சேர்ந்த ஜியோஸ்கன் நிறுவனம் இது போல் ட்ரோன்கள் மூலம் உருவங்களை 2022 துபாய் உலக கால்பந்து போட்டி, ரெட் சீ திரைப்பட திருவிழா மற்றும் இந்தியாவின் லக்னோவில் நடந்த 75வது சுதந்திர விழா நிகழ்ச்சி போன்றவற்றில் அவர்களின் திறமையைக் காட்டி பல அழியா நினைவுகளை உருவாக்கியுள்ளனர்.

  Published by:Janvi
  First published:

  Tags: Drone, Viral Video