சமூக விழிப்புணர்வு வசனம் எழுதியிருந்த லாரி ஒன்றில், அதற்கு முரண்பாடான நிகழ்வு நடந்திருப்பது குறித்து, சமூக பொறுப்பு கொண்ட யாரோ ஒருவர் படம் பிடித்துவிட்டார். அந்தப் படத்தை ஐஏஎஸ் அதிகாரி அவானிஷ் ஷரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இணையத்தில் பகிரப்பட்ட அந்த புகைப்படத்தில், வெட்டப்பட்ட மர துண்டுகளை ஏற்றி கொண்டு சாலையில் லாரி ஒன்று பயணித்துக் கொண்டிருப்பது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த லாரியின் போர்டில் “அதிக மரங்களை நடுவோம்’’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. அறிவுரை சொல்வது ஈஸி; ஆனால், அதை கடைப்பிடிப்பது கடினம் என்பதை உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு தருணத்திலும் நீங்கள் உணர்ந்து கொண்டிருபீர்கள். குறிப்பாக, சமுதாய நலனுக்கான அறிவுரைகளை சொல்வது என்றால் ஒரு பட்டியலே நீளும். ஆனால், யதார்த்த வாழ்வில் அதற்கு முரணான விஷயங்களை பல சந்தர்ப்பங்களில் நாமே செய்ய நேரிடும்.
Also Read:சென்னை மத்திய கூட்டுறவு வங்கியில் வேலை: சென்னைவாசிகள் மட்டும் விண்ணப்பிக்கலாம்
அதேபோல, சாலையில் பயணிக்கும் ஒவ்வொரு வாகனத்திலும் சமுதாய நலன் கருதி ஏதோவொரு விழிப்புணர்வு வாசகம் எழுதப்பட்டிருக்கும். அந்த அறிவுரையை அவர்களே கூட கடைப்பிடிப்பார்களா என தெரியாது; ஆனால் மறக்காமல் ஏதோ வசனம் இடம்பிடித்து விடும்.
Definition of Irony. pic.twitter.com/gYkXfpa0qk
— Awanish Sharan (@AwanishSharan) July 28, 2022
உதாரணத்திற்கு, “மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்’’ என்ற வசனத்தை அனேக வாகனங்களில் பார்த்திருப்போம். ஆனால், அந்த வாகனத்தை ஓட்டும் ஓட்டுநரே கூட சில சமயங்களில் மது அருந்தியிருப்பார். “10 மீட்டர் இடைவெளி விட்டு வரவும்’’ என்று நமக்கு முன்னே செல்லும் வாகனத்தில் எழுதியிருக்கும். ஆனால், அந்த வாகனத்தின் ஓட்டுநரோ, முதலில் செல்லும் வாகனத்தில் இருந்து 10 அடி இடைவெளியில் வண்டியை விரட்டிக் கொண்டிருப்பார்.
இன்றைய நவீன உலகில் இத்தகைய முரண்பாடான விஷயங்கள் அவ்வப்போது வெளிச்சத்திற்கு வந்து விடுகின்றன. குறிப்பாக, ஹெல்மெட் அணியாமல் காவல் சீருடையில் பயணிக்கும் நபர்கள் குறித்த எண்ணற்ற ஃபோட்டோக்களை சமூக வலைதளங்களில் நாம் பார்த்திருப்போம்.
Also Read:குரூப்-1 பதவிக்கான தேர்வில் அசத்திய பெண்கள்.. 66 பணியிடங்களில் 57 இடங்களை பெற்றனர்
அதிக மரங்களை வளர்த்தால் தான், அதை வெட்டி விற்பதற்கான தங்களின் தொழில் சிறப்படையும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்ட வசனம் அது என்று நெட்டிசன்கள் பலர் வேடிக்கையாக கமெண்ட் செய்துள்ளனர். ஒருவேளை, மரம் வெட்டுகிறோம் என்ற குற்ற உணர்ச்சியில் மரம் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி செய்திருப்பார்கள் என்று மற்றொரு பதிவாளர் கமெண்ட் செய்துள்ளார்.
மேலும் ஒரு பதிவாளரின் கமெண்டில், “என்ன இருந்தாலும் மரம் வளர்ப்போம் என்ற அறிவுரையை நாம் எல்லோரும் ஏற்கத்தான் வேண்டும். லாரியில் எழுதப்பட்டிருக்கும் வாசகம் முரண்பாடாக தோன்றினாலும் அதில் சொல்லப்பட்டுள்ள கருத்தில் எந்தத் தவறும் இல்லை என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்’’ என்று தெரிவித்திருந்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Environment, Tree plant, Vehicle