ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

கோமாவில் கடவுளை பார்த்த அமெரிக்க பாட்டி..! கடவுள் என்ன சொன்னார் தெரியுமா?

கோமாவில் கடவுளை பார்த்த அமெரிக்க பாட்டி..! கடவுள் என்ன சொன்னார் தெரியுமா?

தான் கடவுளை நேருக்கு நேர் சந்தித்ததாகவும் தனது குடும்பத்தினர் அனுபவித்த போராட்டங்கள் மற்றும் துயரங்களைப் பற்றி கடவுளிடம் பேசியதாகவும் கூறுகிறார்.

தான் கடவுளை நேருக்கு நேர் சந்தித்ததாகவும் தனது குடும்பத்தினர் அனுபவித்த போராட்டங்கள் மற்றும் துயரங்களைப் பற்றி கடவுளிடம் பேசியதாகவும் கூறுகிறார்.

தான் கடவுளை நேருக்கு நேர் சந்தித்ததாகவும் தனது குடும்பத்தினர் அனுபவித்த போராட்டங்கள் மற்றும் துயரங்களைப் பற்றி கடவுளிடம் பேசியதாகவும் கூறுகிறார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  'கடவுளை நேரில் பார்த்தவர் யாருண்டு இந்த உலகில்?' என்ற கேள்விக்கு நான் பார்த்திருக்கிறேன் என்று அவ்வப்போது சிலர் வருவர். அப்படி ஒரு சம்பவம் இப்போது நடந்துள்ளது. யார் அவர்?கடவுளை எப்படி பார்த்தார் தெரியுமா?

  அமெரிக்காவைச் சேர்ந்த செவிலியர் ஒருவர் கோமா நிலையில் இருந்தபோது கடவுளைக் கண்டதாகக் கூறியுள்ளார். அமெரிக்காவின் கென்டக்கியைச் சேர்ந்த 52 வயதான பென்னி விட்ப்ராட் என்ற செவிலியர், கோமா நிலையில் இருந்தபோது அவரது ஆன்மா தனது உடலை விட்டு வெளியேறியதாகக் கூறுகிறார்.

  அவரது உடல் நிலை மோசமாக இருந்ததால் பென்னியின் மகன் அவரை  மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். செல்வதற்கு முன்பு, சுவாசம் மற்றும் சாப்பிடுவதில் சிரமம் இருந்துள்ளது. அந்த சமயத்தில் தனது ஆன்மா தனது உடலை விட்டு வெளியேறிச் சென்று ஒரு பிரகாசமான ஒளியைப் பார்த்த பிறகு,  தனது ஆவி திடீரென்று மீண்டும் தனது உடலில் சேர்ந்ததாக அந்த பாட்டி கூறியுள்ளார்.

  கெத்தா சேலை அணிந்து கபடி விளையாடும் பெண்கள் - வைரலாகும் ட்விட்டர் வீடியோ!

  இது நடந்த போது தான் கடவுளை நேருக்கு நேர் சந்தித்ததாகவும் தனது குடும்பத்தினர் அனுபவித்த போராட்டங்கள் மற்றும் துயரங்களைப் பற்றி கடவுளிடம் பேசியதாகவும் கூறுகிறார். இந்த வாழ்க்கையில் அவர் அனுபவித்த துன்பங்களுக்கு வெகுமதியாக மறுவாழ்வில் அமைதியைக் காண இருப்பதாக  விட்ப்ரோடிடம்  கடவுள் பதில் சொன்னாராம். ''நான் தனியாக இல்லை. என்னுடன் யாரோ இருக்கிறார்கள் என்பதில் நான் மிகவும் நிம்மதியாக இருக்கிறேன், " என்று பாட்டி கூறியுள்ளார்.

  நம்பிக்கை அற்றவராக இருந்த விட்ப்ராட் தனது கோமாவிலிருந்து எழுந்த பிறகு உடனடியாக குணமடைந்ததாகக் கூறப்படுகிறது. கோமாவில் அவர் கடவுளைக் கண்டதாக சொல்வது அவரது கற்பனை, பிரம்மை எதுவாக இருந்தாலும் அது அவரது வாழ்க்கையை இட்டுச்செல்லும் நம்பிக்கையை அவருக்கு அளித்துள்ளது. கோமாவில் இருந்து மீண்ட அவர் வாழ்க்கையை பற்றிய புதிய கண்ணோட்டத்துடன் மகிழ்ச்சியாக நாட்களை கடத்தி வருகிறார்.

  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: God, Patients suffers