Home /News /trend /

உக்ரைன் வானில் ஏலியன் யூஎப்ஓ?..வானியல் ஆய்வாளர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

உக்ரைன் வானில் ஏலியன் யூஎப்ஓ?..வானியல் ஆய்வாளர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

உக்ரைன் வானில் ஏலியன் யூஎப்ஓ பறக்கிறது என்று உக்ரைன் விண்வெளி ஆராய்ச்சியாளர் ஆய்வு கட்டுரையை வெளியிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • international, IndiaUkraine Ukraine
    உக்ரைன் தலைநகரான கீவ் வான்பகுதியில் யூஎப்ஓ தென்பட்டது என்று உக்ரைன் வானியல் ஆய்வாளர் அவருடைய ஆராய்ச்சி கட்டுரையில் தெரிவித்துள்ளார். இந்த வெளியீடு உலக அரங்கில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

    உக்ரைன் வானியல் ஆய்வாளரான ஒருவர் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில் உக்ரைன் வான்பகுதியில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள் (Unidentified Flying Objects, UFOs) தென்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த கட்டுரை உக்ரைனின் தேசிய அறிவியல் அகாடமியில் வானியல் ஆய்வாளரான இருக்கும் ஒருவரால் "அடையாளம் காணப்படாத பகுதி நிகழ்வுகளின் கண்காணிப்பு" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

    இதில் உக்ரைன் தலைநகர் கீவ் வனப்பகுதியில் அடையாளம் தெரியாத யூஎப்ஓ காணப்பட்டது என்று தெரிவித்துள்ளார். இந்த யூஎப்ஓ பறப்பதை கீவ் மற்றும் வினரிவ்காயில் உள்ள விண்கல் கண்காணிப்பு நிலையத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

    ஆனால் இதனை அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பு மறுத்துள்ளது. உக்ரைனில் தற்போது நடைபெறும் போரினால் அங்கு டோரோன்கள் அல்லது விமானங்கள் பறந்திருக்கலாம் என்று விளக்கம் கொடுத்துள்ளனர்.

    Also Read : வயதான தம்பதியினரின் மகனை கண்டுபிடிக்க உதவிய ஸ்விக்கி ஏஜென்ட் - உயிர்ப்புடன் வாழும் மனித நேயம்.!

    இந்த கட்டுரையில் பல யூஎப்ஓ பறந்ததாகவும் அவற்றின் வேகம் வினாடிக்கு 3 முதல் 15 டிகிரியாக இருந்ததாகத் தெரிவித்துள்ளார். மேலும் யூஎப்ஓ-களை "காஸ்மிக் மற்றும் பாண்டம்" என்று இரண்டு வகையாகப் பிரித்துள்ளனர். காஸ்மிக் என்றால் வெளிச்சமாகத் தெரியும் பொருள். பாண்டம் என்றால் வெளிச்சம் தெரியாத மறைத்திருக்கும் பொருள்.

    இது குறித்து உக்ரைன் வானியல் ஆய்வாளர் தெரிவிக்கையில், சாதாரண தொழில்நுட்பத்தை வைத்து அதனைச் சரியாகக் கண்டுபிடிக்க முடியாது. இன்னும் மேம்படுத்தப்பட்ட கண்காணிப்பு தொழில்நுட்ப கருவிகள் தேவை என்று கூறியுள்ளார்.
    Published by:Janvi
    First published:

    Tags: Alien, Russia - Ukraine

    அடுத்த செய்தி