Home /News /trend /

இவ்ளோ தைரியமா! ஏவுகணைக்கு அருகில் நின்று ஷேவ் செய்யும் நபர்.. வைரல் வீடியோ

இவ்ளோ தைரியமா! ஏவுகணைக்கு அருகில் நின்று ஷேவ் செய்யும் நபர்.. வைரல் வீடியோ

 வைரல் வீடியோ

வைரல் வீடியோ

உக்ரேனிய நபர் ஒருவரது வீட்டில் போரின் போது ரஷ்ய ஏவுகணை ஒன்று தாக்கியுள்ளது. அந்த ஏவுகணைக்கு அருகில் நின்று அந்த நபர் ஷேவ் செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

உலகில் உள்ள கொடிய விஷயங்களில் முதன்மையானது ஒரு நாட்டின் மீது இன்னொரு நாடு போர் புரிவது தான். இங்கு எல்லைகள் என்கின்ற பெயரில் சில நாடுகள் பல காலமாக போர்களை சந்தித்து வருகிறது. இந்த போரில் கோடிக்கணக்கான மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழப்பதோடு உயிர்களையும் இழக்கின்றனர். போர் என்றாலே ஒரு மாபெரும் மனித தன்மையற்ற செயலாக தான் கருதப்பட்டு வருகிறது. இப்படி பல காலமாக போர்களை தனது அன்றாட வாழ்வில் சில நாடுகள் சந்தித்து வருகின்றன.

குறிப்பாக உக்ரைன், சிரியா, போன்ற நாடுகள் இது போன்ற மோசமான போர்களை தினம்தோறும் சந்தித்து வருகின்றன. இங்கு மக்கள் தங்களது வாழ்வை மிகுந்த அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர். மேலும், இந்த மக்களுக்கு போர் மிகவும் சகஜமான ஒன்றாகவும் மாறி உள்ளது. இதற்கு காரணம், இவர்களிடம் 'இழப்பதற்கு ஒன்றும் இல்லை' என்பதே. இப்படி போர் நிகழ்ந்து அதன் மூலம் பாதிக்கப்பட்ட ஒரு வீட்டில் உள்ள நபர் செய்த விஷயம் தான் இணையத்தில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

உக்ரேனிய நபர் ஒருவரது வீட்டில் போரின் போது ரஷ்ய ஏவுகணை ஒன்று தாக்கியுள்ளது. இது இவரது சமையலறையில் தாக்கி இருக்கிறது. இந்த அறைக்கு அருகில் தான் முகம் கழுவும் வாஷ் பேசின் உள்ளது. இதில் இந்த நபர் தனது தாடியை மழிப்பதை காட்டும் விதமாக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தான் தற்போது இணையத்தில் பேசு பொருளாக உள்ளது. இந்த நம்பமுடியாத வினோதமான வீடியோ இப்போது வைரலாகியும் உள்ளது.

இராணுவ உபகரணங்களின் ஒரு பகுதி அவரது வீட்டின் கூரையில் இருந்து தொங்கினாலும், அந்த நபர் அது குறித்து பெரிதாக கண்டு கொள்ளாமல், ஒரு வழக்கமான நாளை ரசிப்பது போல் உள்ளார். சேதமடையாத ராக்கெட் அந்த நபரின் வீட்டிற்குள் அவரது கூரை வழியாக ஊடுருவியதை கேப்ஷனாக கொண்டு இந்த வீடியோவை பதிவிட்டு உள்ளார்.

இந்த வீடியோவை பார்க்கும் யாராக இருந்தாலும், ஒரு நொடி திடுக்கிட தான் செய்யும். ஏனென்றால், அந்த அளவிற்கு அதிர்ச்சி தரும் ஏவுகணையை அருகில் வைத்து கொண்டு இந்த நபர் எப்படி இவ்வளவு கூலாக ஷேவிங் செய்கிறார் என்று யோசிக்க தோணும். இந்த வீடியோ இணையத்தில் வெளியானதில் இருந்து வைரலாக பரவி வருகிறது. அவரது வீட்டில் ஏவுகணைத் துண்டு இருந்தபோதிலும், அந்த நபர் எவ்வளவு அமைதியாகவும் நிதானமாகவும் இருந்தார் என்பதை நம்ப முடியாத ஒன்றாக உள்ளது என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

also read : 27 ஆண்டுகளாக ஒருமுறை கூட விடுப்பு எடுக்காத ஊழியருக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி!


அதில் ஒருவர் "ப்ரோ என் அறையில் சிலந்தி இருந்தாலே நான் என் அறைக்குள் செல்லமாட்டேன். ஆனால், இந்த மனிதர் ஏவுகணை அருகில் இருந்தும் அங்கு நின்றுகொண்டு ஷேவிங் செய்கிறார்" என்று அதிர்ச்சியான எமோஜியை பயன்படுத்தி கமெண்ட் செய்துள்ளார். இன்னொருவர்“சரி... இதை ஆன் பண்ணினால், அடுத்த 4 நாட்களுக்கு அடுப்புக்கும், ஹீட்டருக்கும் எரிபொருள் வேண்டியதில்லை” என்று கூறியுள்ளார். மூன்றாவதாக ஒருவர் , "அவர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், கோப்பை அவரது வீட்டிற்கு இலவசமாக வழங்கப்பட்டது." என்று வேடிக்கையாக கமெண்ட் செய்துள்ளார்.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Russia - Ukraine, Viral Video

அடுத்த செய்தி