Home /News /trend /

லாரி ஓட்டுநருக்கு அடித்த ஜாக்பாட்.. கோடிகளில் கொட்டிய பணமழை! 

லாரி ஓட்டுநருக்கு அடித்த ஜாக்பாட்.. கோடிகளில் கொட்டிய பணமழை! 

மாதிரி படம்

மாதிரி படம்

தான் வாங்கிய லாட்டரி சீட்டிற்கு 1.5 லட்சம் ரூபாய் பரிசு கிடைக்கும் என நினைத்துக் கொண்டிருந்த டிரக் ஓட்டுநருக்கு ஜாக்பாட்டாக ரூ.7.5 கோடி கிடைத்துள்ள சம்பவம் இணையத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

    லாட்டரி சீட்டுகளைப் பொறுத்தவரை ஒருவருக்கு எப்போது அதிர்ஷ்டம் அடிக்கும் என்றே சொல்ல முடியாது. பல ஆண்டுகளாக லாட்டரி சீட்டுக்களை வாங்கும் நபர்களுக்கு பரிசு விழாமலும் போயிருக்கிறது, ஒரே ஒருநாள் லாட்டரி சீட்டு வாங்கியவர் கோடீஸ்வரர் ஆன கதைகளும் உண்டு. நம்ப சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் சொல்வது என்றால் “ஒருத்தருக்கு அதிர்ஷ்டம் எப்போ வரும், எப்படி வரும்ன்னு சொல்ல முடியாது. ஆனால் எதிர்பார்க்காத நேரத்தில சர்ப்ரைஸா வரும்”.

    அப்படித்தான் அமெரிக்காவைச் சேர்ந்த டிரக் ஓட்டுநர் ஒருவருக்கு எதிர்பாராத நேரத்தில் லாட்டரி சீட்டு மூலம் ஜாக்பாட் அடித்துள்ளது. அமெரிக்காவில் இல்லினாய்ஸ் பகுதியில் வசித்து வரும் 48 வயதான டிரக் ஓட்டுநர் ஒருவர் மிச்சிகனுக்கு பயணம் செய்துள்ளர். அப்போது மட்டவானில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் லாட்டரி டிக்கெட் வாங்கியுள்ளார். அந்த டிக்கெட்டில் கீறி, பார்கோடை ஸ்கேன் செய்தவர், தனக்கு $2,000 டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் 1.5 லட்சம் ரூபாயை பரிசாக வென்றதாக நினைத்துள்ளார். ஒருவழியாக நமக்கும் அதிர்ஷ்டம் அடித்துவிட்டது என நினைத்து மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

    ஆனால் அதற்கு பிறகு தான் மிகப்பெரிய சர்ப்ரைஸ் காத்துக்கொண்டுள்ளதை, டிரக் ஓட்டுநர் அறிந்திருக்கவில்லை. டிரக்கிற்கு திரும்பிய பின்னரே ஓட்டுநர் தான் லாட்டரி டிக்கெட்டை முழுவதுமாக சுரண்டவில்லை என்பதை கண்டார். உடனே அதனை முழுவதுமாக சுரண்டிப்பார்த்தவர் அதிர்ச்சியில் வாயடைத்து போயுள்ளார். ஏனெனில் அவருக்கு உண்மையாக கிடைத்த பரிசுத்தொகை 1 மில்லியன் டாலர்கள் ஆகும் (இந்திய மதிப்பில் 7.5 கோடி ரூபாய்). அதனை பார்த்ததும் தனக்கு ஜாக்பாட் அடித்துவிட்டதாக கத்தி கூச்சலிடும் அளவிற்கு மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

    முதற்கட்டமாக அவருக்கு $693,000 செட்டில்மென்ட் கிடைத்துள்ளது. அதில் ஒரு புது டிரக்கை வாங்க திட்டமிட்டுள்ள அந்த ஓட்டுநர், மீதமுள்ள பணத்தை எதிர்கால தேவைக்கு சேமித்து வைக்கவும், முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    also read : இவ்ளோ தைரியமா! ஏவுகணைக்கு அருகில் நின்று ஷேவ் செய்யும் நபர்.. வைரல் வீடியோ

    எதிர்பாராதவிதமாக லாட்டரி மூலம் ஜாக்பாட் அடித்து கோடீஸ்வரர் ஆனவர்களின் கதை இணையத்தில் வைரலாவது இது முதல் முறை கிடையாது. இம்மாத தொடக்கத்தில், அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவர், $585, 949 அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ. 4.5 கோடி ரூபாய் மதிப்புள்ள ஜாக்பாட்டை வெல்வதற்கு முன்பு வெறும் $600 டாலர்களை மட்டுமே வென்றதாக தவறாக நம்பினார். ஆனால் அவர் தனது லாட்டரி டிக்கெட்டை காண்பித்து பணம் பெறுவதற்காக அந்த ஏஜென்ஸிக்கு சென்ற போது, அவர்கள் உண்மையில் வென்றது 4.5 கோடி ரூபாய் எனக்கூறி இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். இந்த செய்தியும் இணையத்தில் வைரலாகி, பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

     
    Published by:Tamilmalar Natarajan
    First published:

    Tags: Lottery

    அடுத்த செய்தி