Home /News /trend /

இப்படி ஒரு டிரைவிங்கை இதுவரை பார்த்திருக்க முடியாது - வியக்க வைக்கும் வீடியோ

இப்படி ஒரு டிரைவிங்கை இதுவரை பார்த்திருக்க முடியாது - வியக்க வைக்கும் வீடியோ

வாகனம் ரிவர்ஸ் ஆகும் வைரல் வீடியோ

வாகனம் ரிவர்ஸ் ஆகும் வைரல் வீடியோ

Viral Video | வேனை இயக்கிய டிரைவர் ரிவர்ஸில் வாகனத்தை எடுத்து மெதுமெதுவாக அதே சமயம் துல்லியமாக 2 மரக்கட்டைகளின் மேலும் வாகனத்தின் வீல்கள் இருக்கும்படி ஏற்றுகிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
கார் போன்ற வாகனங்களை ஓட்ட கற்று கொள்ள சில நாட்கள் செலவழித்தால் போதும். சில நாட்களிலேயே காரை நன்றாக ஓட்ட முடியும். ஆனால் எந்தவொரு கடினமான சூழ்நிலையிலும் காரை ஓட்டுபவர் தான் டிரைவிங்கை நன்கு கற்று தேர்ந்த ஒரு நம்பிக்கைக்குரிய டிரைவராக கருதப்படுவார்.

@FredSchultz35 என்ற ட்விட்டர் அக்கவுண்டில் அடிக்கடி வித்தியாசமான மற்றும் அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் இந்த அக்கவுண்டில் ஒரு த்ரில்லிங்கான வீடியோ ஷேர் செய்யப்பட்டது. பொதுவாக மலைகள், கால்வாய்கள், பாலைவனங்கள் போன்ற இடங்களில் நீண்ட மர கட்டைகளில் வாகனத்தை இயக்கி ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் செல்லும் டிரைவர்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதில் குறிப்பிட்ட வாகனம் கடந்து செல்லும் அளவிற்கு மர கட்டைகள் இருக்கும்.

ஆனால் கால்வாய் ஒன்றில் ஒன்றுக்கு ஒன்று இணையாக வைக்கப்பட்ட இரண்டு பெரிய மர கட்டைகள் மீது ஒரு வேனை ஓட்டி செல்லும் அதுவும் ரிவர்ஸில் செல்லும் வீடியோ சமீப நாட்களாக சர்வதேச அளவில் சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. காண்போரை வியப்பில் மற்றும் அதே சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்தும் இந்த த்ரிலிங் வீடியோ வழக்கம் போல @FredSchultz35 ட்விட்டர் அக்கவுண்டில் ஷேர் செய்யப்பட்டுள்ளது. சாதாரண ரோட்டில் கரை ரிவர்ஸ் எடுப்பது என்பதே மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ஒரு செயல் என்னும் போது, இரு மரக்கட்டைகள் மீது வேனை ரிவர்ஸ் எடுத்து செல்லும் குறிப்பிட்ட டிரைவரின் திறமை அசாத்தியமான ஒன்றாக நெட்டிசன்களால் புகழப்பட்டு வருகிறது.

Read More : எனக்கும் பலூன் கொடுங்க... காத்திருந்து பலூனை வாங்கிய நாயின் க்யூட் வீடியோ


வைரல் வீடியோவில் ஒரு அகலமான கால்வாய் தெரிகிறது, அதன் நடுவில் தண்ணீர் மற்றும் சேறு நிரம்பியுள்ளது. கால்வாயின் மறுபுறம் கார்கள் நிறுத்தப்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது. கார்கள் நிறுத்தப்பட்டுள்ள பக்கத்தில் இருக்கும் சிறிய ரக வேன் ஒன்றை எதிர்பக்கம் கொண்டு வருவதை சவாலாக கொண்டு செயல்படுகிறார் அந்த டிரைவர். ஏற்கனவே குறிப்பிட்டபடி கால்வாயை கடக்க மர பாதைகள் இல்லை. ஒன்றுக்கொன்று இணையாக படுக்க வைக்கப்பட்டுள்ள 2 மரக்கட்டைகள் மட்டுமே உள்ளன.

அந்த வேனை இயக்கிய டிரைவர் ரிவர்ஸில் வாகனத்தை எடுத்து மெதுமெதுவாக அதே சமயம் துல்லியமாக 2 மரக்கட்டைகளின் மேலும் வாகனத்தின் வீல்கள் இருக்கும்படி ஏற்றுகிறார். பின் தொடர்ந்து பின்னோக்கி முன்னேறுகிறார். வேனின் வீல்கள் இடது மற்றும் வலது பக்கம் திரும்பினால், அவ்வளவு தான் கால்வாயில் வேன் கவிழ்ந்து அவரும் காயமடையும் அபாயம் உள்ளது. எனினும் வீல்களை வலது, இடது என எப்படியும் அட்ஜஸ்ட் செய்யாமல் மரக்கட்டைகளின் மீது எப்படி நேராக ஏற்றினாரோ அது போலவே கடைசி வரை மெதுவாக வாகனத்தை ரிவர்ஸ் செய்து வெற்றிகரமாக கால்வாயின் மறுபக்கத்தை அடைந்து விடுகிறார். ஆனால் இந்த காட்சியை பார்ப்போருக்கு அவர் ரிவர்ஸில் வரும் ஒவ்வொரு நொடியும் திக் திக்கென்று இருக்கிறது.

இந்த வைரல் வீடியோவை பார்க்கும் நெட்டிசன்களில் பெரும்பாலானோர் கிட்டத்தட்ட இது ஒரு வியத்தகு சாதனை என்றே டிரைவரை பாராட்டி வருகின்றனர். சுமார் 2 நிமிடம் 18 வினாடிகள் ஓட கூடிய அந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்..இந்த வீடியோ பல லட்சம் வியூஸ்களை பெற்றுள்ளது. இந்த வாகனம் ஆட்டோமேட்டிக் கூட இல்லை, ரிவர்ஸ் கேமரா இல்லை. ஆனாலும் கூட டிரைவர் மிகவும் புத்திசாலித்தனமாக அதை ரிவர்ஸில் திருப்பினார் என்று பலர் கமெண்ட்ஸில் பாராட்டு தெரிவித்து உள்ளனர். பலரும் பாராட்டு தெரிவிக்கும் அதே நேரத்தில் குறிப்பிட்ட டிரைவர் தேவையின்றி தன்னையும், வாகனத்தையும் ஆபத்தில் ஆழ்த்த பார்த்துள்ளதாக சிலர் விமர்சித்து வருகின்றனர்.

 
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Trending, Viral

அடுத்த செய்தி