Home /News /trend /

இதுவல்லவா வீடு... இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பிய பெங்களூரு தம்பதியின் அசத்தல் யோசனை!

இதுவல்லவா வீடு... இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பிய பெங்களூரு தம்பதியின் அசத்தல் யோசனை!

இதுவல்லவா வீடு...பெங்களூரு தம்பதியின் அசத்தல் யோசனை!

இதுவல்லவா வீடு...பெங்களூரு தம்பதியின் அசத்தல் யோசனை!

Trending | இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு திரும்பிய தம்பதி முற்றிலும் இயற்கையோடு இணைந்த , சுற்றுச்சூழலுக்கு தீங்குவிளைவிக்காத வீட்டை கட்டி, இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளனர்.

நவீனமயமாக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு, ஹைடெக் கட்டமைப்பு கொண்ட சொகுசு வீடுகளுக்குப் பதிலாக வெறும் மண் மட்டும் மரத்தால் ஆன வீட்டில் வசிப்பதை உங்களால் நினைத்துப்பார்க்க முடிகிறதா? நாகரீகம் என்ற பெயரில் கெமிக்கல் கலந்த பெயிண்ட்கள், மார்பிள், டைல்ஸ் போன்றவற்றை கொண்டு ஆடம்பரமான வீட்டை கட்டவே அனைவரும் ஆசைப்படுகிறோம். 

கடந்த 28 ஆண்டுகளாக இங்கிலாந்தில் வசித்து வந்த வாணி கண்ணனும் அவரது கணவர் பாலாஜியும் 2018ஆம் ஆண்டு இந்தியாவுக்கு குடிபெயர்ந்தனர். அப்போதுதான் சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலையான வீட்டைக் கட்ட முடிவு செய்தனர். இதற்கான திட்டமிடலை இவர்கள் இந்தியாவிற்கு திரும்பும் முன்பே போட்டுள்ளனர். அதற்கு காரணம் அவர்கள் வாழ்க்கையில் சந்தித்த ஒரு சம்பவம். 2009ம் ஆண்டு முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருந்த போது, நாப்கின்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், பேபி ஃபீட் பாட்டில்களின் எண்ணிக்கையை கணக்கில் எடுத்துக்கொள்ளத் தொடங்கினர். எனவே அவர்கள் மறுசுழற்சி செய்யக்கூடிய மற்றும் மக்கும் தன்மை கொண்ட பொருட்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து 2010 இல் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தபோது, ​​அவர்கள் இன்னும் அதிகமாகச் செய்ய விரும்பி, தங்கள் சொந்த நாடான இந்தியாவுக்குச் செல்ல முடிவு செய்தனர். 2020ம் ஆண்டு பெங்களூருவில் தங்களுக்கான சொந்த வீட்டை வாங்க விரும்பி களமிறங்கிய அவர்கள், அடுக்குமாடி குடியிருப்புகளின் விலையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். எனவே தங்களுக்கு என ஒரு சொந்த வீட்டை கட்டிக்கொள்ள முடிவெடுத்த வாணி, பாலாஜி தம்பதி பத்தாண்டுகளுக்கும் மேலாக பெங்களூருவில் புகழ்பெற்ற நிறுவனமாக விளங்கும் மஹிஜாவை தொடர்பு கொண்டுள்ளனர்.

Also Read : உருவத்தை கண்டு எடை போடாதே! சக்திவாய்ந்த எறும்புகளை பற்றிய சுவாரஸ்ய உண்மைகள்...


2,400 சதுர அடியுள்ள நிலத்தை பார்வையிட்ட மகிஜா நிறுவனத்தைச் சேர்ந்த கட்டிட கலை நிபுணரான அனிருத் ஜெகநாதன், வாணி மற்றும் பாலாஜி தம்பதிகளின் விருப்பத்திற்கு ஏற்ப பாரம்பரிய தோற்றத்துடன் கூடிய வீட்டை கட்டமைக்க முடிவெடுத்தார்.

கட்டுமான பொருட்கள்:

மரம்:

வீட்டில் அலங்காரம் மற்றும் பிற வேலைபாடுகளுக்கு கூட புதிதாக மரங்களை வெட்டவில்லை. அதற்கு பதிலாக இடிக்கப்பட்ட வீடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட பழைய மரங்களையே பயன்படுத்தியுள்ளனர். கட்டுமானப் பணியின் போது எஞ்சியிருந்த மரத்தைக் கொண்டு, அதை புத்தக அலமாரிகளாக மாற்றினார்கள்.

செங்கற்கள்:

7 சதவீதம் சிமெண்ட், மண், செம்மண், இரும்பு துகள்கள், சுண்ணாம்புக் கல் மற்றும் நீர் ஆகிய ஆறு கூறுகளை கலந்து வீட்டிற்கு செங்கல் தயாரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் சுவர்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், சிமெண்ட்டிற்கு பதிலாக மண்ணையே மேற்பூச்சாகவும் பயன்படுத்தியுல்ளனர்.

இரும்பு கம்பிகள்:

இரும்பு கம்பிகளைக் கொண்டு கான்கிரீட் ஊற்றி அடித்தளம் அமைப்பதற்கு பதிலாக தேங்காய் ஓடு, பழைய பொருட்களைக் கொண்டு அடித்தளத்தை உருவாக்கி அதனை சேறு கொண்டு நிரப்பியுள்ளனர்.

வீட்டின் சிறப்பம்சங்கள்:

சூரிய சக்தி:

தலா 4.8 கிலோவாட் திறன் கொண்ட 11 சோலார் பேனல்கள் செலுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்த குடும்பம் தாங்கள் உபயோகிக்கும் எலக்ட்ரானிக் பொருட்களுக்கான மின்சாரத்தை தாங்களே உற்பத்தி செய்கின்றனர். ஆன்-கிரிட் சிஸ்டம் மூலம் உற்பத்தி செய்யப்படும் கூடுதல் மின்சாரம் ஒரு யூனிட் 3 ரூபாய் என்ற வகையில் திருப்பி அனுப்பப்படுகிறது.

குடிநீர்:

மழைக் காலங்களில், இவர்களது வீட்டிலிருந்து 200 மீ தொலைவில் உள்ள போர்வெல்களில் தண்ணீர் நிரம்பி, போதுமான அளவு சப்ளை கிடைக்கும். இரண்டு 5 அடி மற்றும் ஒரு 8 அடி ஆழமுள்ள கிணறுகள் 30 வீடுகளுக்கு தண்ணீர் வழங்குகின்றன.

தோட்டம்:

1000 அடி தோட்டமும் உள்ளது, அதில் வெந்தய கீரை, கறிவேப்பிலை, கொத்தமல்லி போன்றவற்றை விளைவிக்கின்றனர். தற்போது இரண்டு ஏக்கரில் புதிய நிலம் ஒன்றை வாங்கி, அந்த பண்ணையில் காய்கறிகளை விளைவித்து வருகின்றனர்.

 
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Trending, Viral

அடுத்த செய்தி