Home /News /trend /

ஒரே நேரத்தில் இரு கைகளால் எழுதி அசத்தும் மாணவி - அதீத திறமையைக் கண்டு இணையத்தில் மக்கள் நெகிழ்ச்சி.

ஒரே நேரத்தில் இரு கைகளால் எழுதி அசத்தும் மாணவி - அதீத திறமையைக் கண்டு இணையத்தில் மக்கள் நெகிழ்ச்சி.

ஒரே நேரத்தில் இரு கைகளால் எழுதும் ஆதி ஸ்வரூபா

ஒரே நேரத்தில் இரு கைகளால் எழுதும் ஆதி ஸ்வரூபா

இந்த தனித்துவ திறமையோடு வளம் வரும் மாணவிக்கு இணையத்தில் ரசிகர்கள் கூட்டம் அதிகரிக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Karnataka, India
    கர்நாடக மாநிலம் மங்களூரைவை சேர்ந்த ஆதி ஸ்வரூபா என்ற மாணவி ஒரே நேரத்தில் தனது இரு கைகளைப் பயன்படுத்தி 11 விதமான ஸ்டைல்களில் எழுதி உலக சாதனைப் படைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

    நம்மில் பலருக்கு வலது கை அல்லது இடது கையில் எழுதும் பழக்கமும் உள்ளது. ஆனால் அம்பிடெக்ஸ்டெரிட்டி ( Ambidexterity ) என்ற ஒரே நேரத்தில் வலது மற்றும் இடது கையில் எழுதும் தனித்துவமான திறன் என்பது அனைவருக்கும் இருக்காது. ஒரு சிலருக்கு மட்டுமே அந்த அதீத திறமை இருக்கும். இப்படிப்பட்ட ஒரு திறமையோடு வலம் வருகிறார் கர்நாடக மாநிலம் மங்களூரைவைச் சேர்ந்த ஆதி ஸ்வரூபா என்ற மாணவி. இந்த திறமையை எப்படிப் பயன்படுத்துகிறார் என்பது பற்றி நிச்சயம் நாமும் தெரிந்துகொள்ள வேண்டும்.

    கர்நாடக மாநிலம் மங்களூரைவைச் சேர்ந்த ஆதி ஸ்வரூபா சிறு வயதிலிருந்தே அதிக புத்தகங்கள் படிப்பதோடு எழுத்துக்களை எழுதிப்பார்க்கும் திறன் கொண்டவராக இருந்துள்ளார். மேலும் தன்னிடம் உள்ள திறமையை வளர்த்துக்கொண்ட இவர், 11 வெவ்வேறு ஸ்டைல்களில் எழுதும் திறனைப் பெற்றுள்ளார். குறிப்பாக இவர் ஒரு கையில் ஆங்கில மொழிகளிலும், மற்றொரு கையில் கன்னட மொழியிலும் எழுதும் திறன் கொண்டதோடு, ஒரு நிமிடத்திற்கு 45 வார்த்தைகள் எழுதும் திறன் கொண்டவராக விளங்குகிறார்.



    இந்த அதீத திறனால் உலக சாதனைப் பெற்றுள்ள இவரது திறமையை மீண்டும் சோசியல் மீடியாவின் வாயிலாக வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார் ஏர் மார்ஷல் அனில் சோப்ரா. இவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், ஒரு லட்சத்தில் ஒருவர் மட்டுமே தேர்ச்சி பெறக்கூடிய அரிய திறனை ஆதி ஸ்வரூபா கற்றுக்கொண்டதாகவும், பதினொரு விதமான பாணிகளில் அவர் எழுத முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

    இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், இதைப்பார்த்த நெட்டிசன்கள், லட்சத்தில் ஒருவருக்கு தான் AMBIDEXTERITYஎன்ற ஒரே நேரத்தில் இரு கைகளைப் பயன்படுத்தி எழுதும் திறன் உள்ளது என்றும், இந்தியர்களின் திறமைகளுக்கு எல்லையே இல்லை என்றும் ட்விட் செய்து வருகின்றனர். மேலும் மற்றொரு பயனர் ஒருவர் 3 இடியட்ஸ் படத்தில் போமன் இராணியின் கதாபாத்திரம் போல் தனது இரு கைகளையும் பயன்படுத்தி பச்சை பலகையில் வேகமாக எழுதுவதை இது நினைவூட்டுகிறது என்பது போன்ற கருத்துக்களோடு மாணவியின் அதீத திறமையை இணையத்தில் பாராட்டிவருகின்றனர்.

    இந்த திறமைகுறித்து முன்னதாக பேசிய ஆதி, நீங்கள் வேலையில் சாதிக்க வேண்டும் என்றால் முயற்சியையும், பயிற்சியையும் ஒரு போதும் நிறுத்தக்கூடாது எனத் தெரிவித்திருந்தார்.
    Published by:Janvi
    First published:

    Tags: Girl students, Mangalore

    அடுத்த செய்தி