ஒவ்வொரு மனிதருக்கும் கண்டிப்பாக ஏதோவொரு வினோத பழக்கம் இருக்கத் தான் செய்யும். அது உணவு சார்ந்த பழக்கம் முதல் அன்றாட செயல்கள் வரை மாறுபடலாம். இதைப் பலரும் சாதாரண ஒன்றாகக் கடந்து செல்வர். ஆனால், சிலருக்கு இருக்கக் கூடிய வினோத பழக்கம் நம்மை அதிர்ச்சியடையச் செய்யும் அளவிற்கு இருக்கக் கூடும். உதாரணத்திற்கு, வெளிநாட்டில் ஒரு பெண்மணி முடியைச் சாப்பிடும் பழக்கம் கொண்டவராக இருக்கக் கூடிய செய்து முதல், மனித கறியைச் சாப்பிடும் செய்தி வரை அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் தரக் கூடியவை.
அந்தவரிசையில் இன்னொரு வினோத பழக்கத்தைக் கொண்டவர்தான் பீகாரைச் சேர்ந்த தரம்தேவ் ராம். தரம்தேவ் ராம் என்பவர் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள மஞ்சா கருப்பு பைகுந்த்பூர் கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், நிலத் தகராறுகள், அப்பாவி விலங்குகள் கொல்லப்படுவது போன்ற பிரச்சனைகள் முற்றிலும் நிற்கும் வரை குளிக்கப் போவதில்லை என்கிற உறுதிமொழியை எடுத்துள்ளார். இது முற்றிலும் வினோதமான ஒன்றாக இருந்தாலும், மனித நேயத்தின் அடிப்படையில் இந்த பழக்கத்தைப் பின்பற்றி வருகிறார்.
Also Read:உங்கள் கண்களுக்கு சவால்.. கருப்பு, வெள்ளை கோடுகளை வரிசையாக பார்க்க முடியுமா?
தற்போது 40 வயதாகும் தரம்தேவ் 22 ஆண்டுகளுக்கு முன்பு குளிப்பதை நிறுத்திவிட்டு இன்றுவரை தனது உறுதிமொழியைத் தொடர்கிறார். இந்த காலகட்டத்தில், அவரது வாழ்க்கை பல கட்டங்களைக் கடந்துள்ளது, ஆனால் அவர் தனது உறுதிமொழியில் பிடிப்பாக உள்ளார். அதே போன்று இவரது மகனும் மனைவியும் இறந்த பிறகும் ஒரு துளி நீரைக் கூட அவர் உடலைத் தொடவில்லை. அந்த அளவிற்கு இவரின் உறுதிமொழியைப் பிடிவாதமாக உள்ளார்.
இதில் பலருக்கும் உள்ள ஆச்சரியமாக விஷயம் என்னவென்றால், அவரின் உடலில் எந்த விதமான பாதகமான விளைவுகளும் ஏற்படவில்லை, அதாவது அவருக்கு எந்த நோயும் வரவில்லை மற்றும் அவரது உடல் நன்றாக இருக்கிறது. இதுவும் மக்களுக்கு விநோதமாக உள்ளது. இது குறித்து தரம்தேவ் ராம் அளித்த பெட்டியில், “1975 ஆம் ஆண்டில், நான் வங்காளத்தின் ஜக்தால் என்கிற இடத்தில் ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்தேன், மேலும் 1978-இல் திருமணம் செய்துகொண்டு சாதாரண வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தேன்.
ஆனால், 1987-இல் நிலத் தகராறுகள், விலங்குகள் கொல்லப்படுதல், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருவதை நான் திடீரென்று உணர்ந்தேன். எனவே, இதற்கான பதிலைத் தேடி, ஒரு ‘குரு’வை அணுகினேன், அவர் என்னைத் தன் சீடனாகக் கொண்டு பக்தி மார்க்கத்தைப் பின்பற்றத் தூண்டினார். அப்போதியிருந்து, நான் பக்தி மார்க்கத்தில் சென்று, ராமனுக்காகத் தியானம் செய்ய ஆரம்பித்தேன்" என்று விளக்கினார்.
Also Read:உலகையே ஆச்சர்யத்தில் ஆழ்த்திய அரிதான பிங்க் நிற வைரம்; விலை எவ்வளவு தெரியுமா?
இவர் துறவு வாழ்க்கையை மேற்கொள்ள, தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு 2000 ஆம் ஆண்டு வீட்டிற்கு வந்துள்ளார். ஆனால் குடும்பத்தில் உள்ள நிதி சூழலின் அழுத்தத்தால், அவர் தொழிற்சாலைக்கு மீண்டும் வேலைக்குத் திரும்பினார். உணவு மற்றும் குளியல் ஆகியவற்றைத் துறக்க அவர் எடுத்த முடிவைத் தொழிற்சாலை மேலாளர் அறிந்ததும், அவரை பணிநீக்கம் செய்துள்ளார். எனவே மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார்.
இதற்கிடையில், அவரது மனைவி மாயா தேவி 2003-இல் இறந்து விட்டார். அப்போது கூட அவர் குளிக்க மறுத்துவிட்டார். அவரது மகன்களில் ஒருவர் இறந்த பிறகும் தரம்தேவ் அசையாமல் அப்படியே இருந்துள்ளார். தரம்தேவின் மற்றுமொரு பிள்ளை ஜூலை 7, 2022 அன்று இறந்துள்ளார். அப்போதும் கூட அவர் குளிக்கவில்லை. இவரின் செயல் பலருக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது, இது குறித்து அதிகாரிகள் விசாரணை செய்தனர். பிறகு தர்மதேவ் கூறியது உண்மை என்று உள்ளூர் வாசிகள் ஊர்ஜிதம் செய்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.