• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • இந்த புகைப்படத்தில் பாம்பு எங்கே உள்ளதென்று உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா? இன்டர்நெட்டை கலக்கும் படம்! 

இந்த புகைப்படத்தில் பாம்பு எங்கே உள்ளதென்று உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா? இன்டர்நெட்டை கலக்கும் படம்! 

இந்த போட்டோ இன்டர்நெட்டில் பகிரப்பட்டவுடன், அது வைரலாகியது. போட்டோவில் பாம்பைக் கண்டுபிடிக்க முயற்சிக்கும் இணைய வாசிகளிடமிருந்து 700 க்கும் மேற்பட்ட லைக்குகள் மற்றும் டன் கணக்கிலான கமெண்டுகளை பெற்றுள்ளது.

  • Share this:
'பாம்பென்றால் படையும் நடுங்கும்' என்பார்கள் ஆனால் அது பாம்பு பிடிப்பவர்களுக்கு இல்லை. அந்த வகையில், சன்ஷைன் கோஸ்ட் ஸ்னேக் கேட்சர்ஸ் (Sunshine Coast Snake Catchers) என்ற பெயரில் ஆஸ்திரேலிய பாம்பு பிடிப்பவர்களின் ஒரு குழு, ஒரு வனப்பகுதியில் மறைந்திருக்கும் பாம்பின் படத்தை இன்டர்நெட்டில் ஷேர் செய்தப் பின்னர் பல இணையவாசிகள் மண்டையை உடைத்துக்கொண்டனர். வனாந்தரத்தில் உள்ள பாம்பைக் கண்டுபிடிக்க குழுவினர் நெட்டிசன்களைக் கேட்டார்கள். 

அவர்களின் பேஸ்புக் பக்கத்தில் ஷேர் செய்யப்பட்ட அந்தப் படத்தில் சில மரங்கள், உயரமான புற்களை கொண்ட பச்சை நிலத்தையும், தரையை மூடிய காய்ந்த இலைகளும் இருந்தன. முதலில் அந்த போட்டோவை பார்க்கும்போது அதில் பாம்புகள் எதுவும் இல்லை, இருப்பினும், கொஞ்சம் கவனமாக பார்த்தால், புற்களில் ஒரு விஷ ஊர்வனம் மறைந்திருப்பதைக் காணமுடியும். இந்த படத்தை ஷேர் செய்து, பாம்பைக் கண்டறிந்த பிறகும் போனஸ் பாய்ண்ட்டுகள் வழங்கப்படும் என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர். ஆஸ்திரேலியாவின் கோடை காலம் நாட்டில் உள்ள பாம்புகளுக்கு பிஸியான நேரம், என்று இதன் தலைப்பு வைக்கப்பட்டிருந்தது.

இந்த போட்டோ இன்டர்நெட்டில் பகிரப்பட்டவுடன், அது வைரலாகியது. போட்டோவில் பாம்பைக் கண்டுபிடிக்க முயற்சிக்கும் இணைய வாசிகளிடமிருந்து 700 க்கும் மேற்பட்ட லைக்குகள் மற்றும் டன் கணக்கிலான கமெண்டுகளை பெற்றுள்ளது. இந்த போட்டோ, பல யூசர்களை குழப்பத்தில் ஆழ்த்திய நிலையில், அவர்களில் சிலர் இந்த சவாலை கிண்டலடித்தனர். இதில் ஒரு யூசர் கருத்து தெரிவிக்கையில், “மூன்று மரங்களுக்கு அருகில், உள்ள ஒரு புல்லில் ஸ்க்ரப்பி, ஸ்க்ரப் மலைப்பாம்பு இருந்தது” என்றும், மற்றொருவர் அந்தா இருக்கும் பாம்பு முல்கா இனத்தைச் (Mulga species) சேர்ந்தது என்றும் கூறினார். 

மேலும் ஒருவர் தனது கண் கண்ணாடிகளை கூட போட்டு பார்த்து தேடியதாகவும் கூறினார், ஆனால் இருந்தும் எதையும் பார்க்க முடியவில்லை என்று சோகத்துடன் கமெண்ட் செய்திருந்தார். மேலும் அவர் மேலும் - கீழுமாக தேடியதால் தனக்கு தலைவலி வருவதாகவும் கமெண்ட் செய்தார். பின்னர், சன்ஷைன் கோஸ்ட் பாம்பு பிடிப்பவர்கள் போட்டோவில் பாம்பை கண்டுபிடித்து, தாங்கள் கேட்டிருந்த கேள்விக்கான சரியான பதிலை வெளியிட்டு, அது ஒரு டெமான்சியா ச்சாமோபிஸ் (Demansia psammophis) என்பதை வெளிப்படுத்தினர். பொதுவாக இது மஞ்சள் முகம் கொண்ட சவுக்கை பாம்பு என்றும் ஆஸ்திரேலியாவில் பரவலாக காணப்படும் விஷம் மற்றும் வேகமாக நகரும் எலாபிடே என்ற பாம்பு குடும்பத்தின் ஒரு பகுதியாகும் என்றனர்.

சன்ஷைன் கோஸ்ட் பாம்பு பிடிப்பவர்கள், தொழில் ரீதியாக பயிற்சி பெற்ற ஊர்வன பிடிப்பவர்கள். அவர்கள் பெரும்பாலும் குடியிருப்புகளிலோ பிற இடங்களிலோ காணப்படும் விஷ ஊர்வனவற்றின் படங்களையும், வீடியோக்களையும் போஸ்ட் செய்கிறார்கள். சமீபத்தில், வாமுரானில் (Wamuran) ஒரு ஆஸ்திரேலிய குடும்பத்தின் லாண்டரி சிங்க்கில் (laundry sink) ஈஸ்ட்ரன் பிரவுன் ஸ்நேக் (Eastern Brown Snake) ஒன்று ஏறும் படத்தை அவர்கள் ஷேர் செய்தனர். 

படத்தைப் பகிர்ந்துகொண்டு, இந்த விஷ பாம்பு உயரமான பகுதிகளில் ஏற முடியாது என்று மக்கள் அடிக்கடி நினைப்பதாக குழு குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், சில பாம்பு இனங்கள் சூப்பராக ஏறும் என்றனர். ஈஸ்ட்ரன் பிரவுன் கலர் பாம்புகள் (Eastern Brown Snake) அதிக நேரம் தரையில் செலவழிக்கும் என்று அவர்கள் போஸ்ட் செய்திருந்தனர்.  இருப்பினும் அவை மிகவும் திறமையாக ஏறவும் செய்யும். பாம்பு பிடிப்பவர்களில் ஒருவரால் அந்த பாம்பு இடமாற்றம் செய்யப்பட்டதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.ட்ரெண்டிங் செய்திகளுக்கு இணைந்திருங்கள்..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ram Sankar
First published: