இன்னொரு அய்லான்; கரை ஒதுக்கிய 2 வயது குழந்தையும், தந்தையும்! உலகை உலுக்கிய சம்பவம்

2015-ம் ஆண்டு அகதியாக, செல்ல முயன்று கடலில் மூழ்கி உயிரிழந்து கரை ஒதுங்கிய சிரிய நாட்டைச் சேர்ந்த மூன்று வயது சிறுவன் அயிலான் குர்தியின் புகைப்படம் உலகை உலுக்கியது.

Web Desk | news18
Updated: June 26, 2019, 5:25 PM IST
இன்னொரு அய்லான்; கரை ஒதுக்கிய 2 வயது குழந்தையும், தந்தையும்! உலகை உலுக்கிய சம்பவம்
உயிரிழந்தவர்களின் உடல்கள்
Web Desk | news18
Updated: June 26, 2019, 5:25 PM IST
எல் சல்வடார் நாட்டிலிருந்து ஆற்றின் வழியே அகதிகளாக அமெரிக்காவுக்குச் செல்ல முயற்சித்தபோது ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்த 2-வயது குழந்தையும், அவரது தந்தையின் புகைப்படம் உலகை உலுக்கிவருகிறது.

உலகின் பல்வேறு பகுதிகளிலுள்ள உள்நாட்டு சூழல் சரியில்லாத, போர்ச் சூழல் நிலவும் நாடுகளில் இருந்து அந்நாட்டு மக்கள் வேறு நாட்டுக்கு அகதிகளாக குடி பெயரும் நிகழ்வு அரை நூற்றாண்டு காலமாக தொடர்ந்து வருகிறது.

அய்லான் குர்தியின் புகைப்படம்சிரியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து புலம் பெயர்பவர்களுக்கும், அமெரிக்காவின் அண்டை நாடுகளான மெக்ஸிக்கோ, எல் சல்வடார் உள்ளிட்ட நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு அதிகமாக புலம் பெயர்ந்து வருகின்றனர். அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்து வருபவர்களைக் கட்டுப்படுத்த, ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, முற்றிலும் சகிப்புத்தன்மையற்ற (Zero Tolerance) நடவடிக்கை என்று கடுமையான நடவடிக்கை எடுத்துவருகிறது.

உயிரிழந்த தந்தையும், 2 வயது மகளும்


இந்தநிலையில், வடக்கு அமெரிக்காவின் எல்லைப் பகுதிக்கும், மெக்ஸிக்கோவின் எல்லைக்கும் அருகில் பாயும் நதியான ரியோ கிரேன்டியின் கரையில் இரண்டு வயது குழந்தையும், அவரது தந்தையின் உடலும் கரை ஒதுங்கியிருந்தது. நீரில் மூழ்கி உயிரிழந்த இருவரின் தலையும் நீருக்குள் மூழ்கி முகம் தெரியாத நிலையில் இருந்தது. இருவரும், அமெரிக்காவின் அண்டை நாடான எல் சல்வடார் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

Loading...

ஆஸ்கர் அல்பெர்டோ மார்டிநெஸ்ஸும், அவரது மகளும் அமெரிக்காவுக்குள் அகதியாக செல்ல முயலும்போது, ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். அந்தப் புகைப்படம் தற்போது, உலகை உலுக்கியுள்ளது. 2015-ம் ஆண்டு அகதியாக, செல்ல முயன்று கடலில் மூழ்கி உயிரிழந்து கரை ஒதுங்கிய சிரிய நாட்டைச் சேர்ந்த மூன்று வயது சிறுவன் அயிலான் குர்தியின் புகைப்படம் உலகை உலுக்கியது. தற்போது, இந்தப் புகைப்படமும் அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கடுமையான திட்டத்தால், மிகவும் ஆபத்தான பாதையின் மூலம் அகதிகளாக செல்ல முயற்சி செய்வதால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்த எல் சல்வடார் வெளியுறவுத்துறை அமைச்சர் அலெக்ஸாண்ட்ரா ஹில், ‘நம்முடைய நாடு மீண்டும் ஒருமுறை துக்கத்தில் மூழ்கியுள்ளது. நாங்கள், எல்லாக் குடும்பத்தினரிடமும் கெஞ்சிக் கேட்கிறோம். ஆபத்தை முயற்சிக்காதீர்கள். வாழ்க்கை மிகவும் மதிப்பு மிக்கது. பொருளாதார சிக்கல்களை தீர்க்க அரசு முயற்சித்துவருகிறது’ என்று தெரிவித்துள்ளார்.

Also see:

First published: June 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...