கைதிகளால் நடத்தப்படும் நூலகத்துடன் கூடிய காஃபி ஷாப்..!

இவர்களின் கஃபே திட்டத்திற்கு ஹிமாச்சலப் பிரதேசத்தின் Tourism Development Corporation (HPTDC) உதவிகள் அளித்து துணை நிற்கிறது.

Web Desk | news18
Updated: July 12, 2019, 11:11 AM IST
கைதிகளால் நடத்தப்படும் நூலகத்துடன் கூடிய காஃபி ஷாப்..!
புக் கஃபே (image- Shimla book cafe/Facebook)
Web Desk | news18
Updated: July 12, 2019, 11:11 AM IST
சிறை வாழ்க்கையின் நோக்கம் தீமையிலிருந்து நன்மையைக் கற்றுக்கொள்வதுதான். அதை சரியாக உணர்ந்த சிம்லாவைச் சேர்ந்த கைதிகள் சொந்த உழைப்பில் கஃபே ஷாப் நடத்தி வருகின்றனர்.

சிறைக்கைதிகளால் நடத்தப்படும் இந்த கஃபே குளிர் மிகுந்த மலைகளுக்கு நடுவே அமைந்திருப்பது சுற்றுலாவாசிகளுக்கு நல்ல அனுபவத்தை அளிக்கிறது.

புக் கஃபே என்னும் இந்த காஃபி ஷாப்பில் பல வகையான ஸ்னாக்ஸ் வகைகள், குளிர்பானங்களோடு எழில் கொஞ்சும் இயற்கை அழகும் கண்களுக்கு விருந்தாகிறது.

ஒரே நேரத்தில் 40 பேர் அமரும் வகையில் அமைந்துள்ள இந்த கஃபேயில் இது மட்டும் ஸ்பெஷல் அல்ல. பெயருக்கு ஏற்ப இங்கு சிறிய அளவிலான நூலகமும் அமைத்துள்ளனர். சர்வதேச புத்தகங்களும் இங்கு கிடைக்கின்றன. எனவே இங்கு ஒரு கப் காஃபியோடு புத்தகம் வாசிக்கவும் வாய்ப்பு கிடைக்கும்.

(image- Shimla book cafe/Facebook)


அதுவும் இதுபோன்ற அமைதியான பசுமைச் சூழல் வாசிப்புக்கு சிறந்த இடமாகும். கைதிகள் என்றில்லாமல் தயக்கமில்லாமல் மக்கள் சகஜமாக வந்து அவர்களுடன் உரையாடிச் செல்கின்றனர் . இது அவர்களுக்கு அதிக மகிழ்ச்சி அளிப்பதாக கஃபே நடத்துபவர்களுள் ஒருவரான ஜெய் சந்த் குறிப்பிடுகிறார்.

மேலும் இது சிறைக்குள் ஒடுங்கியிருந்த எங்களுக்கு மக்களுடன் உரையாடவும் , அவர்களுடன் சகஜமாக உலகத்தோடு ஒன்றிடவும் நல்ல வாய்ப்பாக இருக்கிறது என்று ஜெய் சந்த் கூறியுள்ளார். மக்களும் அவர்கள் நல்ல பண்புகளுடன் உபசரிக்கின்றனர் என்றுக் கூறியுள்ளனர். இவர்களின் கஃபே திட்டத்திற்கு ஹிமாச்சலப் பிரதேசத்தின் Tourism Development Corporation (HPTDC) உதவிகள் அளித்து துணை நிற்கிறது.

மேலும் பார்க்க: உலகக்கோப்பையில் வெற்றியை எதிர்பார்த்து புடவையை நெய்த நெசவாளர்... தோல்வியால் ஏமாற்றம்...!
First published: July 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...