Home /News /trend /

கரும்பு தின்ன கூலி... அதுவும் ரூ.60 லட்சம் சம்பளமாம்... சாக்லெட் நிறுவனத்தின் இனிப்பான அறிவிப்பு

கரும்பு தின்ன கூலி... அதுவும் ரூ.60 லட்சம் சம்பளமாம்... சாக்லெட் நிறுவனத்தின் இனிப்பான அறிவிப்பு

விண்ணப்பிக்கும் நபர் நல்ல சுவை பார்க்கும் திறனையும், அளவிட முடியாத கற்பனை திறனையும் கொண்டிருக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் நபர் நல்ல சுவை பார்க்கும் திறனையும், அளவிட முடியாத கற்பனை திறனையும் கொண்டிருக்க வேண்டும்

ஆண்டுக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் 61 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படும்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    கனடாவைச் சேர்ந்த சாக்லெட் தயாரிப்பு நிறுவனம் ஒன்று ‘கரும்பு தின்னக் கூலியா’ என அசர வைக்கும் வகையில் சூப்பரான வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

    படுத்து உறங்குவது, நாய் உணவைப் பரிசோதிப்பது, பாம்பு விஷம் சேகரிப்பது, கட்டிப்பிடி வைத்தியம், பிறர் கஷ்டத்தைக் கேட்டு அழுவது என உலகம் முழுவதும் பல விநோதமான வேலை வாய்ப்புக்கள் உள்ளன. இந்நிலையில் கனடாவைச் சேர்ந்த கேண்டி ஃபன்ஹவுஸ் (Candy Funhouse) என்ற நிறுவனம் பலரும் எதிர்பார்க்காத கனவு வேலை பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    கனடாவின் ஒன்டாரியோவைச் சேர்ந்த முன்னணி சாக்லெட் தயாரிப்பு நிறுவனமான கேண்டி ஃபன்ஹவுஸ், தலைமை கேண்டி ஆபீசர் (Chief Candy Officer) என்ற பணி குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கலர்புல்லான விளம்பரம் ஒன்றைக் கொடுத்துள்ளது. இந்த பணிக்காக விண்ணப்பிக்கும் நபர் நல்ல சுவை பார்க்கும் திறனையும், அளவிட முடியாத கற்பனைத் திறனையும் கொண்டிருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

    Also Read : உங்கள் கண்களுக்கு சவால்... இந்த கூட்டத்தில் பைலட் எங்கே என்பதை சரியாக கண்டுபிடியுங்க பார்க்கலாம்.!

    இந்நிறுவனம் தனது பதிவில் “இது சாக்லெட் நிறுவனத்தின் மிக முக்கியமான பணியாகும். உங்களுக்கு சாக்லெட், பாப் கலாச்சாரம் மற்றும் இனிப்பு மீது அதிக ஆர்வம் இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்கவும்” எனக் குறிப்பிட்டுள்ளது.

    இந்த வேலைக்காக ஆண்டுக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் 61 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கக் குறிப்பிட்ட வயது வரம்பு எதுவும் கிடையாது. 5 வயதுக் குழந்தைகள் கூடப் பெற்றோரிடம் சம்மதம் பெற்று பணியாற்றலாம். மேலும் சாக்லெட்டை ருசி பார்க்க நீங்கள் அலுவலகத்திற்கோ அல்லது தொழிற்சாலைக்கோ வர வேண்டிய அவசியம் இல்லை, வீட்டிலிருந்த படியே வேலை பார்க்கலாம் என்ற ஆஃபரும் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த பணியில் சேரும் தலைமை கேண்டி ஆபீசரின் வேலை, எல்லா சாக்லெட் மாதிரிகளையும் சுவைத்துப் பார்த்து, எதனை விற்பனைக்கு அனுப்பலாம், அனுப்பக் கூடாது என முத்திரை குத்துவது மட்டுமே. இதனால் தான் விண்ணப்பிக்கும் நபர் சாக்லெட் பற்றி நன்றாக அறிந்திருக்க வேண்டும், நல்ல ருசி பார்க்கும் திறமை இருக்க வேண்டும் போன்ற பல கன்டிஷன்களை அந்நிறுவனம் தனது லிங்கிடு இன் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

    Also Read : என் frienda போல யாரு மச்சான்... யாருடா நீ.. யார் நீ... இணையத்தை கலக்கும் Friendship Day மீம்ஸ்

    பணிக்குச் சேரும் தலைமை கேண்டி ஆஃபீசர், மாதத்திற்கு 3500 சாக்லெட்டுகளை ருசி பார்க்க வேண்டும். அப்படி சாக்லெட்டுகளை ருசி பார்ப்பதால் அந்த ஊழியருக்கு ஏதேனும் உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டால், அதற்கான சிகிச்சை செலவையும் தாங்களே ஏற்றுக்கொள்வோம் என கேண்டி ஃபன்ஹவுஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்ஸ்டாகிராமில் இந்த வேலை குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
    Published by:Janvi
    First published:

    Tags: Chocolate, Job

    அடுத்த செய்தி