ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

கோழிய வச்ச தூண்டிலில் சிக்கிய ராட்சத மலைபாம்பு... நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ

கோழிய வச்ச தூண்டிலில் சிக்கிய ராட்சத மலைபாம்பு... நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

Viral Video | இந்த வீடியோவில் மலைபாம்பு ஒன்று குழாய்க்கு மறுபுறம் இருக்கும் கோழியை இரையாக பிடிக்க முயல்கிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சமூக ஊடகங்களில் சில வகையான வைரல் வீடியோக்கள் உள்ளன, அவை எப்போதும் நம் நினைவில் இருக்கும். ஏனென்றால் அந்த வீடியோக்களை பார்த்தாலே நமக்குப் பயமாக இருக்கும். பயமுறுத்தும் காட்சிகளை நம் மூளை நன்றாக நினைவில் வைத்திருக்கும். இந்த மலைப்பாம்பு வீடியோவும் அப்படித்தான். ஒரு மலைபாம்பு ஒன்று இரையை பிடிக்க வந்து குழாயில் சிக்கி கொள்கிறது.

  குழாயில் சிக்கிய பாம்பு வெளியே வரமுடியவில்லை. கண்ணெதிரே கோழி இருந்தாலும், பாம்பினால் ஒன்றும் செய்ய முடியாது.. இந்த வீடியோ நவம்பர் 11, 2022 அன்று டிவிட்டரில் @OTerrifying என்ற கணக்கில் 15 வினாடிகளுக்கு வீடியோ பதிவாக பதிவிடப்பட்டுள்ளது. இது இதுவரை 51 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

  இந்த வீடியோவில் மலைபாம்பு ஒன்று குழாய்க்கு மறுபுறம் இருக்கும் கோழியை இரையாக பிடிக்க முயல்கிறது. ஆனால் குழாயில் மலைபாம்பு நன்றாக சிக்கி கொண்டு வெளியே வரமுடியாமலும் கோழியையும் பிடிக்க முடியாமல் திணறுகிறது. ஒரு கோழிய வச்சு பெரிய மலைபாம்பை பிடித்துள்ள வீடியோ இணையத்தில் பார்ப்பவர்களின் கவனத்தை பெரிதும் கவர்ந்துள்ளது.

  இந்த வீடியோவை பார்த்த பலர் கலவையான தங்களது விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர். சின்ன மீனா போட்டு பெரிய மீனா பிடிப்பாங்கன்னு சொல்லுவாங்க. ஆனா நீங்க கோழிய வச்சு மலைபாம்பை பிடித்து வைச்சுருக்கிங்க என்றுள்ளார். மற்றொருவர் பாத்த உடனே ஒரு நிமிஷம் தலை சுற்றிச்சுன்னு என்றுள்ளார்.

  Published by:Vijay R
  First published:

  Tags: Trends, Viral