ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

காட்டில் தொலைந்த நபரை சல்லடைபோட்டு தேடிய மக்கள்.. அசால்டாக கண்டுபிடித்த செல்ல நாய்!

காட்டில் தொலைந்த நபரை சல்லடைபோட்டு தேடிய மக்கள்.. அசால்டாக கண்டுபிடித்த செல்ல நாய்!

கண்டுபிடித்த நாய்

கண்டுபிடித்த நாய்

சேகரப்பாவின் நண்பர்கள் அக்கம் பக்கத்தினர் என்று சுமார் 50 பேர் காட்டின் ஒவ்வொரு பகுதியாக அவரைத் தேடியுள்ளார். ஆனால் அவரைக் கண்டுபிடிக்கவில்லை.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Karnataka, India

  50 பேர் கொண்ட குழு கர்நாடகாவின் சிவமொக்கா காட்டில் தொலைந்த தனது உரிமையாளரை கண்டுபிடிக்க இயலாத நிலையில் ஒரு செல்ல நாய் அவரைக் கண்டு பிடித்துள்ளது. நாய்கள் ஜாக்கிரதை கதை பாணியில் இருக்கிறது தானே… என்ன நடந்தது என்று விரிவாக பார்ப்போம்.

  சேகரப்பா, 55, என்பவர் ஏழு வருடங்களாக டாமி என்ற நாயை வளர்த்து வந்தார். அவர் எங்கே சென்றாலும் அவருடன் சுற்றிக்கொண்டு இருந்துள்ளது. குடுமபத்தில் ஒரு உறுப்பினர் போலவே அந்த நாய் இருந்துள்ளது.

  சேகரப்பா, எப்போதும் காலை 6 மணியளவில் காட்டிற்கு சென்று விறகு கொண்டு வருவது வழக்கம். 10 ஆண்டுகளுக்கும் மேலாக இதை அவர் செய்து வருகிறார். 6 மணிக்கு செல்பவர் காலை 10 மணிக்குள் காட்டில் இருந்து திரும்பி விட்டு அயனூரு நகரில் அவர் பணிபுரியும் ஹோட்டலுக்குச் செல்வது வழக்கம்.

  இதையும் படிங்க: உருவக்கேலியை ஒடுக்க வேண்டும்.. கேரள அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!

  அதேபோல் கடந்த சனிக்கிழமை காலையும் விறகு எடுத்துவர காட்டிற்குள் சென்றுள்ளார். 10 மணி தாண்டியும் வரவில்லை. குடும்பத்தினர் சந்தேகம் கொண்டு அக்கம் பக்கத்திடம் விசாரித்தனர். சேகரப்பாவின் நண்பர்கள் அக்கம் பக்கத்தினர் என்று சுமார் 50 பேர் காட்டின் ஒவ்வொரு பகுதியாக அவரைத் தேடியுள்ளார். ஆனால் அவரைக் கண்டுபிடிக்கவில்லை.

  அதன் பின்னர் வழக்கமாக அவருடன் போகும் டாமியை கழற்றிவிட்டுள்ளனர். அது தனது மோப்ப சக்தி கொண்டு தனது உரிமையாளரைத் தேடி கண்டுபிடித்தது. அதன் குரைப்பு ஒலி கேட்டு மக்கள் வந்து பார்த்தபோது மரத்தின் கீழ் மயங்கிக் கிடந்த சேகரப்பாவைக் கண்டனர்.

  மயக்கத்தில் இருந்த அவரை உடனடியாக சிகிச்சைக்காக ரிப்பன்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில், வெப்பம் மற்றும் சோர்வு காரணமாக அவர் மாயமானதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: Dog, Karnataka