Home /News /trend /

நீரில் வந்த பாம்பை ஜாலியாக பிடித்த நபர்... அடுத்த அவர் செய்த அதிரச்சி செயலால் அலறல்

நீரில் வந்த பாம்பை ஜாலியாக பிடித்த நபர்... அடுத்த அவர் செய்த அதிரச்சி செயலால் அலறல்

பாம்பை கையில் பிடித்த நபர்

பாம்பை கையில் பிடித்த நபர்

ஏரியில் ஓடிக்கொண்டிருந்த பாம்பைப் பிடித்த நபர் ஒருவர் அதனை அருகே இருந்த நபர்கள் மீது வீசி ஏறியும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

    இன்டர்நெட் எப்போதுமே ஒரு மாயாஜாலம் உலகம் போன்றது, அதில் படங்கள், மீம்ஸ்கள், கருத்து மோதல்கள், கமெண்ட்கள் என பல வேடிக்கையான விஷயங்களை நீங்கள் கண்டு ரசிக்கலாம். குறிப்பாக வித்தியாசமான வீடியோக்கள் ஏராளமாக கொட்டிக்கிடக்கின்றனர். சில வீடியோக்கள் நம்மை சிரிக்கவைக்கும், சில நம்மை அழவைக்கும், சில வீடியோக்களோ பார்த்த மாத்திரத்தில் நம்மை மிரளவைக்கும்.

    ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், யூ-டியூப் என சோசியல் மீடியாவில் அவ்வப்போது பாம்பு சம்பந்தமான வைரல் வீடியோக்களை பார்த்துச் சிலிர்த்துப் போயிருப்போம். அனகோண்டாவோ, தண்ணீர் பாம்போ ஏதுவாக இருந்தாலும் பாம்பு என்ற ஊர்வனத்தை பார்த்தாலே ஒருவித பய உணர்வு தோன்றுவதைத் தவிர்க்க இயலாது. அதேபோல் சின்ன சின்ன குழந்தைகள் கூட பயமில்லாமல் பாம்பைப் பிடித்து விளையாடும் வீடியோக்களும் சோசியல் மீடியாவில் ஏராளமாகக் கொட்டிக்கிடக்கின்றன.

    Also Read:பெண்களுக்கு எதிரான குற்றம் உள்ளிட்ட பிரச்னைகள் முடிவுக்கு வரும் வரை குளிக்க மாட்டேன் - 20 வருடங்களுகாக குளிக்காமல் இருக்கும் வினோத மனிதர்

    இந்நிலையில் மனிதர்களின் சத்தத்தைக் கேட்டு வேகமாக ஓடிக்கொண்டிருந்த பாம்பு ஒன்றைப் பிடித்த நபர், அருகே இருந்தவர்கள் மீது அதனை வீசி எறிந்து பீதியைக் கிளப்பியுள்ளார். இந்த பயங்கரமான மற்றும் பதற்றமான சூழ்நிலையை உருவாக்கிய பாம்பு வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.



    அந்த வீடியோவில், ஏரி ஒன்றில் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருக்கும் நபர் ஒருவர், தண்ணீரில் வேகமாக நீந்திக் கொண்டிருக்கும் பாம்பைப் பாய்ந்து பிடிக்கிறார். சில விநாடிகள் மட்டுமே பாம்பைக் கையில் வைத்துக்கொண்டு வேடிக்கை காட்டிய அவர், பய உணர்வு ஏற்பட்டதும். அதனை வீசி எறிகிறார். அந்த பாம்பு சந்தேகத்திற்கு இடமில்லாமல் அருகே தண்ணீரில் விளையாடிக்கொண்டிருக்கும் இருவர் மீது விழுகிறது. உடனே பாம்பைக் கண்டு பயந்து போன நபர்கள் பதறியடித்துக் கொண்டு தண்ணீரில் நீந்தித் தப்பிக்கிறார்கள். பார்க்க நகைச்சுவையாக இருக்கும் இந்த வீடியோவை ஐபிஎஸ் அதிகாரி திபன்சு கப்ரா என்பவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

    Also Read:தஞ்சை தமிழ் பல்கலை பட்டமளிப்பு விழா- விண்ணப்பிக்க மாணவர்களுக்கு கால நீட்டிப்பு

    இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது போன்ற எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என்றாலும் ட்விட்டரில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை அந்த வீடியோவை ஒரு லட்சத்து 76 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்கள் கண்டுள்ளனர், 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். சில ட்விட்டர் யூஸர்கள் இந்த வீடியோவிற்கு பல சுவரஸ்யமான கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர். எடுத்துக்காட்டாக, காருக்குள் இருந்து வீசி எறியப்பட்ட பிளாஸ்டிக் பாட்டிலை பெண் ஒருவர் ஸ்டைலாக எட்டி உதைத்து, அதனை மீண்டும் காருக்குள் கொண்டு சேர்க்கும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.

    இதற்கு முன்னதாக சின்னஞ்சிறு பெண் குழந்தை ஒன்று தனது வீட்டுத் தோட்டத்திற்குள் நுழைந்த மிகவும் நீளமான பாம்பின் வாலை பிடித்து விளையாடும் வீடியோ சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது குறிப்பிடத்தக்கது.
    Published by:Janvi
    First published:

    Tags: Snake, Trending Video

    அடுத்த செய்தி