ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

ரயிலுக்கு போட்டியா? ரயில்வே ப்ளாட்பாரத்தில் ஆட்டோ ரைடு! அலேக்காக தூக்கிய போலீஸ்!

ரயிலுக்கு போட்டியா? ரயில்வே ப்ளாட்பாரத்தில் ஆட்டோ ரைடு! அலேக்காக தூக்கிய போலீஸ்!

நடைமேடையில் ஆட்டோ ஓட்டிய நபர்

நடைமேடையில் ஆட்டோ ஓட்டிய நபர்

சமூக வலைத்தள வைரல் வீடியோவால் நடைமேடையில் ஆட்டோ ஓட்டிய நபர் தண்டிக்கப்பட்டுள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Mumbai, India

  நடைமேடையில் எல்லாம் நடந்து சென்றால் ஒருவர் ஆட்டோவில் சென்று சாகசம் காட்டியுள்ளார். இறுதியில் அவரின் செயலுக்குச் சட்டம் தன் கடமையைச் செய்தது. அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

  மும்பையில் உள்ள குர்லா ரயில் நிலையத்தில் கடந்த புதன்கிழமை நள்ளிரவு 1 மணி அளவில் முதல் நம்பர் நடைமேடையில் ஆட்டோ ஒட்டுநர் ஒருவர் அவரின் ஆட்டோவை நடைமேடையில் ஓட்டியுள்ளார். அவரின் இந்த செயலில் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

  ஆட்டோவில் அத்துமீறலை அங்கு இருந்த மக்கள் வீடியோவாக பதிவு செய்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். மேலும் வீடியோவுடன் மும்பை காவல்துறையையும் டேக் செய்துள்ளனர்.

  ஆட்டோ நடைமேடையில் அத்துமீறி நுழைந்ததைத் தண்டிக்கக்கோரி இணையத்தில் எதிர்ப்பு எழுந்தது. அதனைத் தொடர்ந்து மும்பை ரயில்வே பாதுகாப்புப் படை உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர். அவரின் அந்த ஆட்டோவை கைப்பற்றியதாகத் தெரிவித்தனர்.

  Also Read : கனிவாக பேசினால் டிஸ்கவுண்ட்.. அதட்டினால் டபுள் சார்ஜ் - இங்கிலாந்து கஃபேயின் அட்டகாசமான விதி!

  மேலும் மும்பை ரயில்வே பாதுகாப்புப் படை தங்களின் ட்விட்டர் பக்கத்தில் முழு விவரத்தைப் பதிவிட்டுள்ளனர். அதில் புகார் தெரிவிக்கப்பட்ட ஆட்டோவை கைப்பற்றியதுடன் ஆட்டோ ஓட்டுநர் மேல் வழக்குப் பதிவு செய்து அந்த வழக்குப் பதிவு எண்ணையும் (CR No.1305/22 U/S 159 RA) பகிர்ந்துள்ளனர். தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜார்ப்படுத்தி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே சட்டப்படி அவருக்கு ரூ.500 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

  சமூக வலைத்தளத்தின் மூலம் மக்கள் அவர்களுக்குத் தேவையான நீதியை அடைத்துள்ளனர் என்று நெட்டிசன்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

  Published by:Janvi
  First published:

  Tags: Auto Driver, Mumbai, Railway Station