ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

நான் தான் மன்னர் சார்லஸ் மகன்... பிரிட்டனில் பரபரப்பை ஏற்படுத்திய நபர்

நான் தான் மன்னர் சார்லஸ் மகன்... பிரிட்டனில் பரபரப்பை ஏற்படுத்திய நபர்

சிமோன்

சிமோன்

சமீபத்தில் இங்கிலாந்து அரசராக பதவியேற்று இருக்கும் அரசர் சார்லஸ் மற்றும் மனைவி கமீலாவின் மகன் நான் தான் என்று ஒரு நபர் வெளியிட்ட செய்தி பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • interna, IndiaEnglandEnglandEngland

  நான் இந்த நடிகரின் மகன், இந்த நடிகையின் மகள், இந்த பிரபலம் தான் என்னுடைய பெற்றோர் என்று திடீரென்று யாராவது ஒரு நபர் தோன்றி பரபரப்பான செய்திகளை வெளியிடுவார். அதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது, புகைப்படங்கள் இருக்கின்றன என்று யாரேனும் கூறும் செய்தி இணையத்தில் வைரலாகப் பகிரப்படும்.

  இந்தியாவில், தமிழ்நாட்டில் கூட இது பலமுறை நடந்துள்ளது. அந்த வகையில் சமீபத்தில் இங்கிலாந்து அரசராக பதவியேற்று இருக்கும் அரசர் சார்லஸ் மற்றும் மனைவி கமீலாவின் மகன் நான் தான் என்று ஒரு நபர் வெளியிட்ட செய்தி பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது. இதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்

  கமீலாவை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாக தற்போதைய இங்கிலாந்து அரசர் சார்லஸ், மறைந்த இளவரசி டயானாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு, இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்த செய்தி தான். ஆனால் சிமோன் டோராண்டே டே என்பவர் தான்,  அரசர் சார்லஸ் மற்றும் கமீலாவின் ரகசிய மகன் என்ற செய்தியை வெளியிட்டுள்ளார்.

  அவர்களுடைய பதின் பருவத்தில் அதாவது 17 அல்லது 18 வயது இருக்கும் போது காதலித்தனர், அவர்களுடைய குழந்தை தான் சைமன் என்றும், இவரை யாருக்கும் தெரியாமல் 1965 ஆம் ஆண்டு பெற்றெடுத்துள்ளனர் என்றும் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், தற்போதைய இங்கிலாந்து அரசி தான் தன்னுடைய அம்மா என்பதற்கான ஆதாரமாக ஒரு சில புகைப்படங்களையும் வெளியிட்டிருக்கிறார். சைமன் டோராண்டே தற்போது ஆஸ்திரேலியாவில் இருக்கும் குயின்ஸ்லாந்தில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  சிமோன் தன்னுடைய புகைப்படத்தையும், கமீலாவின் புகைப்படத்தையும் மற்றும் கமலாவின் மகனான டாம் பார்க்கர் புகைப்படத்தையும் ஃபேஸ்புக்கில் பதிவேற்றி இருக்கிறார். இதில் இவர்களுக்கு எந்த அளவுக்கு உருவ ஒற்றுமை இருக்கிறது என்பதை மறுக்க முடியாத அளவுக்கு  என்று ஃபேஸ்புக் யூசர்கள் கமெண்ட் செய்து வந்துள்ளனர்.

  Read More: கோவா கடற்கரையில் மகனுடன் பொழுதை கழிக்கும் சச்சின்.. மீன் பிடிப்பதில் ஆர்வம்!

   இதில் ஆச்சரியப்படக்கூடிய விஷயமாக பலரும் சிமோனுக்கு ஆதரவாக பதிவு செய்து வருகின்றனர். ‘நீங்கள் சொல்வதில் முழுக்க முழுக்க உண்மை இருக்கிறது என்பதை நான் நம்புகிறேன். இவ்வளவு ஆண்டுகள் நீங்கள் போராடியும் இன்னும் நீங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது, குட் லக்!’ என்று ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.

  மற்றொரு யூசரும் சிமோனுக்கு ஆதரவாக ‘நான் உங்களை நம்புகிறேன். உங்கள் புன்னகை வில்லியம்ஸ் மகள் போலத்தான் இருக்கிறது. உங்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்; கிடைக்க வேண்டுமென்று கடவுளை வேண்டி கொள்கிறேன். இதன் மூலம் நீங்கள் தேவையில்லாத கிசுகிசுக்களை தவிர்க்க முடியும்’ என்று கூறியுள்ளார்.

  ‘இங்கே மறைப்பதற்கு ஏதோ ஒன்று இருக்கிறது. அது விரைவில் வெளியே வரும்’ என்று மற்றொரு யூசர் ஆதரவாக தெரிவித்திருக்கிறார். வேறு சிலரோ, உருவ ஒற்றுமை இருக்கிறது என்றாலே அரசரின் மகனாக மாற முடியாது. எனவே இதில் இருக்கும் உண்மை அனைவருக்கும் தெரிய வேண்டும் தெரிவித்துள்ளனர்.

  Read More: போன் பண்ணி தொல்லை தரக் கூடாது.. மணமகளுக்கு நூதன ஒப்பந்தம் போட்ட மணமகனின் நண்பர்கள்

  சமீபத்தில், இங்கிலாந்து அரசி எலிசபெத் மறைவுக்கு முன்பாகவே, தன்னைப் பற்றிய விவரங்களை கூறி அரசிக்கு கடிதம் எழுதி இருந்ததாகவும், டிஎன்ஏ சோதனை செய்யக் கோரியும் சிமோன் தெரிவித்திருக்கிறார்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Trending, Trending News, Viral